Bigg Boss Tamil
அறிவு இல்ல!.. கமல்தான் செருப்பால அடிச்சா மாதிரி சொன்னாருல!.. விஷ்ணுவை நருக்கென்று கேட்ட அர்ச்சனா!..
bigboss Archana and Vishnu : பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு எண்ட்ரி மூலமாக உள்ளே வந்தவர் வி.ஜே அர்ச்சனா. அர்ச்சனாவிற்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பு இருந்து வந்தது. அதை இன்னமும் அதிகமாக்கிய பெருமை நடிகை மாயாவிற்குதான் சேரும்.
ஏனெனில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தப்போது யாருடனும் சண்டை இல்லாமல் சுமூகமாக விளையாடவே வந்தார். வெளியில் இருந்து பிக்பாஸை பார்த்து வருவதால் அவருக்கு அதுக்குறித்து பெரிதாக நிலைப்பாடு இல்லாமல் இருந்தது. எனவே பிக்பாஸ் வீட்டிற்கும் சென்றதுமே மாயா மற்றும் அவரது புல்லி கேங்கால் டார்ச்சரை அனுபவித்தார் அர்ச்சனா.
பொதுவாக மக்கள் மத்தியில் திமிராக இருப்பவரை விடவும் கரிசனத்தை பெறுபவர்தான் அதிக வரவேற்பை பெற முடியும். அந்த நிலையில் அர்ச்சனாவிற்கு மக்களிடம் இருந்து ஆதரவு இருந்தது. போக போக அவரும் விளையாட்டை புரிந்து விளையாட துவங்கிவிட்டார்.
பிக்பாஸ் விளையாட்டை பொறுத்தவரை நாம் நாமாக இருந்தால் அந்த விளையாட்டில் ஜெயிக்க முடியாது. எனவே அனைவரையும் எதிர்க்க துவங்கினார் அர்ச்சனா. தற்சமயம் விஷ்ணு பேசும்போது பொழிச்சுன்னு பொழிச்சுன்னு அடிச்சி விட்டிடனும் என கூறியது அர்ச்சனாவிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனை தொடர்ந்து அறிவு இல்ல. ஒருத்தர்கிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியாதா.. அன்னைக்கே கமல் சார்தான் செருப்பால அடிச்ச மாதிரி சொன்னாருல.. எந்த பிரச்சனைலையும் என்ன இழுக்காதீங்கன்னு.. அப்புறம் எதுக்கு எதுக்கெடுத்தால் கமல் சார் கேப்பாரான்னு வர்றீங்க என கேட்டுள்ளார் அர்ச்சனா.
பதிலுக்கு விஷ்ணுவும் வழக்கம் போல தொண்டை கட்டிக்கொள்ளும் அளவிற்கு பேசி தீர்த்துவிட்டார்.