இதுதான் சரியான நேரம்.. பிக்பாஸை பயன்படுத்தி விற்பனையில் இறங்கிய கமல்ஹாசன்!.. என்ன ஆண்டவரே இதெல்லாம்!.
Kamalhaasan Bigboss : கடந்த மூன்று மாதங்களாக நடைப்பெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று முடிவை காண உள்ளது. எப்போதும் குறைவான நபர்களை கொண்டே செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறைதான் அதிகமான போட்டியாளர்களை கொண்டு சென்றுள்ளது.
போன முறை இறுதிக்கட்டத்தில் மொத்தமே 3 பேர்தான் இருந்தனர். ஆனால் இந்த முறை இறுதிக்கட்டத்திலும் 5 பேர் இருக்கின்றனர். அர்ச்சனா, மாயா, தினேஷ், மணி, விஷ்ணு ஆகிய ஐந்து நபர்கள் இருக்கின்றனர். இதில் மாயா,விஷ்ணு, மணி மூவரும் போட்டி துவங்கிய முதல் நாளில் இருந்தே இருந்து வருகின்றனர்.

அர்ச்சனா மற்றும் தினேஷ் இருவரும் வைல்ட் கார்டு மூலமாக வந்தவர்கள். இந்த நிலையில் இன்று பிக்பாஸ் க்ளைமேக்ஸை நெருங்கிய நிலையில் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே செல்கிறார். சென்று சில மணி நேரங்களை போட்டியாளர்களுடன் கழிக்க உள்ளார்.
இந்த நிலையில் சென்னை புத்தக திருவிழாவில் கமல்ஹாசன் மய்யம் என்கிற அவரது புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த புத்தகம் புத்தக திருவிழாவில் பெரிதாக விற்பனை ஆகவில்லை என பேச்சுக்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் அந்த புத்தகத்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ப்ரோமோ செய்துள்ளார் கமல்ஹாசன். அவர் எழுதிய மய்யம் புத்தகத்தை போட்டியாளர்களுக்கு பரிசளித்து அதை மக்கள் மத்தியிலும் விளம்பரம் படுத்தியுள்ளார்.