Connect with us

பிக்பாஸ் ஃபைனலுக்கான போட்டி!.. வெயிட்டு தூக்க வச்ச பிக்பாஸ்!..

Bigg Boss tamil

Bigg Boss Tamil

பிக்பாஸ் ஃபைனலுக்கான போட்டி!.. வெயிட்டு தூக்க வச்ச பிக்பாஸ்!..

Social Media Bar

Bigboss tamil : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் அதிகமாக ஆகிவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் போட்டிகள் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் இன்னமும் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 8 நபர்கள் வரை இருந்து வருகின்றனர். பொதுவாக இறுதி வாரம் வரும் பொழுது பிக் பாஸ் வீட்டில் மொத்தமே மூன்று அல்லது நான்கு பேர்தான் இருப்பார்கள் ஆனால் இந்த முறை நிறைய பேர் இருப்பதால் அவர்களை எலிமினேஷன் செய்வதற்கு பல வித வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முடிவு செய்து இருக்கின்றனர்.

எப்போதும் ஏதாவது ஒரு டாஸ்க் வழங்குவது பிக் பாஸ் வீட்டில் வழக்கமாக நடக்கும் விஷயம்தான். ஆனால் இந்த முறை இந்த எண்ணிக்கையை குறைப்பதற்காக அந்த டாஸ்கின் வழியாக கூட எலிமினேஷனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது பிக் பாஸ்.

எனவே இந்த முறை ஒரு வித்தியாசமான டாஸ்க்கை வழங்கி உள்ளனர். ஆளுக்கு ஒரு முயல் பொம்மையை கொடுத்து அதனை சுற்றி பார்க்கிங்கில் போடப்படும் கற்களை கொண்டு ஒரு கோட்டையை கட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. போட்டியாளர்களும் அதேபோல செய்தனர் ஆனால் அதை முடித்த பிறகு அந்த கற்களை அள்ளி ஒரு இடத்தில் போட்டுவிட்டு யார் முயலை வெளியில் எடுத்துக்கொண்டு வருகிறார்களோ அவர்கள் பைனலுக்கு செல்ல முடியும் என்று விதிமுறை வைக்கப்பட்டுள்ளது.

சும்மாவே பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கோ பஞ்சாமிருக்காது இந்நிலையில் இந்த போட்டியில் கண்டிப்பாக சண்டை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

To Top