Bigg Boss Tamil
10 லட்சம் வந்தா யோசிப்போம்!.. பிக்பாஸில் வந்த பணப்பெட்டி டாஸ்க்… தயாராகும் தினேஷ்!.
Biggboss tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த மாதத்தோடு முடிவடைய இருக்கும் நிலையில் அதன் போட்டிகள் அடுத்து சூடுப்பிடித்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது.
பணப்பெட்டி டாஸ்க்கை பொறுத்தவரை பிக்பாஸில் இருந்து வீட்டிற்குள் ஒரு பணப்பெட்டி வைக்கப்படும். அந்த பணப்பெட்டியில் குறிப்பிட்ட தொகை எழுதப்பட்டிருக்கும். போட்டியாளர்களில் யாரேனும் ஒருவர் விரும்பினால் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் போட்டியில் இருந்து விலகி விடலாம்.

ஒருவேளை யாருக்கும் அந்த பணம் வேண்டாம் என்றால் அடுத்த பணப்பெட்டி வரும். அதில் தொகை இன்னமும் அதிகமாக போடப்பட்டிருக்கும். இப்படியே பிக்பாஸ் போட்டியாளர்கள் நிராகரிக்க நிராகரிக்க பணத்தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
இறுதியாக யாருமே அந்த பணப்பெட்டியை எடுக்காத பட்சத்தில் அந்த பெட்டியை எடுத்து விடுவார்கள். இந்த நிலையில் இன்று 1 லட்சம் தொகைக்கான பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதை பார்த்த தினேஷ் அந்த தொகை 10 லட்சமாக மாறட்டும் அதன் பிறகு யோசிப்போம் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று ஒருவர் எலிமினேட் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
