Bigg Boss Tamil
அம்மான்னு உள்ள விட்டா தப்பு பண்ணிட்டீங்களே!.. ரவீணா அம்மாவிற்கு பிக்பாஸ் கொடுத்த தண்டனை!. கதறி அழுத ரவீனா..
பிக்பாஸ் துவங்கியது முதலே அதில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ரவீனாவும் மணியும்தான். ரவீனாவும் மணியும் வெகு நாட்களாகவே காதலித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் இணைந்து பாடல்களுக்கு நடனமாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
அதுவே அவர்கள் இருவருக்கும் காதல் உருவாக காரணமாக அமைந்தது. பிக்பாஸிற்குள் வந்து ஒரு சில வாரங்களிலேயே அவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இந்த நிலையில் தற்சமயம் ஒரு வாரம் முழுவதும் இவர்களது பெற்றோரும் போட்டியாளர்களுடன் சேர்ந்து பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரவீனா காதல் விவகாரம் தொடர்பாக பேசிய அவரது தாய் இருவரும் இங்கு காதல் தொடர்பாக எதுவும் செய்யக்கூடாது என கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டின் விதிகளை மீறிவிட்டதாக அவர் மீது பிக்பாஸ் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் உறவினர்களை அனுப்பும்போதே வெளி உலகம் தொடர்பான எந்த ஒரு விஷயத்தையும் போட்டியாளர்களிடம் பேசக்கூடாது என கூறியுள்ளனர். ஆனால் அதை மீறி ரவீனாவிடம் அவரது தாய் வெளி உலக விஷயங்களை பேசியுள்ளார்.
மேலும் சங்கேத பாஷை மூலம் ரவீனாவிடம் சில தகவல்களை பேசியுள்ளார். இதெல்லாம் பிக்பாஸ் வீட்டின் விதி மீறல்களாக பார்க்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு தண்டனையாக பிக்பாஸ் வீட்டில் இருந்து ரவீனாவின் குடும்பத்தை வெளியேற்றியுள்ளார் பிக்பாஸ்.
இந்த நிகழ்வால் கண்ணீர் விட்டு அழ துவங்கினார் ரவீனா. இதுவரை பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு பிரச்சனைக்கும் அழாமல் இருந்த ரவீனா அம்மா செண்டிமெட்டில் அழ துவங்கிவிட்டாரே என இதுக்குறித்து கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.
