சீரிஸ் வந்த காலம் முதலே சௌந்தர்யாவுக்கு இருந்த உறவு… இது தனி கதையா இருக்கே..!
சௌந்தர்யா மற்றும் விஷ்ணு இவர்களின் காதல் குறித்த விஷயம் இப்போது அதிகமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை சௌந்தர்யா. அதற்கு முன்பு நிறைய படங்களிலும் லவ் தொடர்களிலும் நடித்திருந்தாலும் கூட அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக அதிக வரவேற்பு கிடைத்தது.
அதேசமயம் அவருக்கென்று ஒரு பெரிய ரசிக்கப்பட்டாளமும் உருவானது பலரும் சௌந்தர்யாவை விரும்பி வந்தனர் என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் சௌந்தர்யா வேறு ஒரு நபரை விரும்புகிறார் என்பது ரசிகர்கள் பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயமாக இருந்து வருகிறது.
வேற மாதிரி ஆபீஸ் என்கிற சீரியஸில் நடித்த காலம் முதல் சௌந்தர்யாவிற்கும் விஷ்ணுவிற்கும் பழக்கம் உண்டு. அப்போது இருந்தே இருந்து அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. அதற்கு தகுந்தாற் போல பிக்பாஸ் வீட்டில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சௌந்தர்யா விஷ்ணுவிடம் கேட்டுள்ளார்.
இன்னொரு பக்கம் ரசிகர்கள் கூறும்போது பிக் பாஸில் ட்ரெண்டாக வேண்டும் என்று பலரும் இப்படி காதலிப்பதாக பிக் பாஸில் கூறுவது உண்டு. ஆனால் வெளி உலகில் அதற்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பார்கள் ஏற்கனவே இதே மாதிரி சில பிரபலங்கள் பிக் பாஸில் செய்திருக்கின்றனர் என்கின்றனர் ரசிகர்கள்.