Connect with us

இங்க நல்லா சத்தம் போடு… மாயா, பூர்ணிமாக்கிட்ட மட்டும் தலையை ஆட்டு!.. கோபப்பட்டாலும் கலாய் வாங்கும் டைட்டில் வின்னர் விக்ரம்!..

vikram archana

Bigg Boss Tamil

இங்க நல்லா சத்தம் போடு… மாயா, பூர்ணிமாக்கிட்ட மட்டும் தலையை ஆட்டு!.. கோபப்பட்டாலும் கலாய் வாங்கும் டைட்டில் வின்னர் விக்ரம்!..

Social Media Bar

Biggboss vikram : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய காலகட்டம் முதலே அதில் பெரிதாக எதுவுமே செய்யவில்லை என்றாலும் கூட இன்னமும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறாமல் இருக்கும் ஒரு அதிர்ஷ்டசாலியான போட்டியாளர் என்றால் அது சரவணன் விக்ரம்தான்.

விஜய் டிவியில்  நாடகங்களில் நடித்து வந்த சரவணன் விக்ரம் தொடர்ந்து பிக் பாஸில் வாய்ப்பை பெற்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். வந்தது முதல் பிக்பாஸ் வீட்டில் எதுவுமே செய்யவில்லை என்றாலும் கூட சரவணன் விக்ரம் வெளியேறாமல் இருப்பதற்கு போட்டியாளர்களே முக்கிய காரணமாக இருக்கின்றனர்.

போட்டியாளர்கள் தங்களுக்குள் இருக்கும் சொந்த பகையின் காரணமாக நாமினேட் செய்யும் பொழுது விக்ரமை விட்டு வருகின்றனர். இதனால் தான் பாடகர் கானா பாலா கூட இரண்டு வாரங்கள் அந்த வீட்டில் இருந்தார். இந்த நிலையில் இன்று டாஸ்க்கில் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க தகுதி இல்லாதவர்கள்  என்று கூறி அவர்களை வட்டத்தை விட்டு வெளியில் அனுப்ப வேண்டும் என்ற நிலையில் விஜய் அர்ச்சனாவை குறை கூறினார்.

அர்ச்சனா விக்ரமிடம் இருக்கும் பிரச்சனையை குத்தி குத்தி காண்பித்து அவரை நோக்கடிக்கிறார் என கூறினார் இதற்கு விக்ரம் கோபமடைந்து அவரும் சத்தமிட்டுள்ளார். பூர்ணிமா இதற்கு சப்போர்ட்டாக குரல் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து ரசிகர்கள் கூறும் பொழுது இந்த வீட்டிலேயே அர்ச்சனாவிடம் மட்டும்தான் விக்ரம் சத்தம் போடுகிறார். பூர்ணிமாவோ அல்லது மாயாவோ அவரிடம் எது பேசினாலும் அங்கு அமைதியாக சென்று விடுகிறார் என்று அதையும் நக்கல் அடித்து வருகின்றனர். இன்னும் சிலர் விக்ரமிற்கு கோபம் எல்லாம் வருகிறது பாருங்கள் என்று கூறுகின்றனர்.

To Top