Connect with us

20 வருஷத்துல நிறைய பார்த்துட்டேன்… டேய் இவண்டா என கூறுகின்றனர்… மணிகண்டன் குறித்து பேசிய பிரபலம்!.

Tamil Cinema News

20 வருஷத்துல நிறைய பார்த்துட்டேன்… டேய் இவண்டா என கூறுகின்றனர்… மணிகண்டன் குறித்து பேசிய பிரபலம்!.

Social Media Bar

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக மாறியிருப்பவர் நடிகர் மணிகண்டன். ஜெய் பீம் திரைப்படம் மூலமாக நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன்.

ஜெய் பீம் திரைப்படத்தில் அவருடைய தத்ரூபமான நடிப்பு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு திரைத்துறையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வர துவங்கின.

தொடர்ந்து குட் நைட் திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன். குட் நைட் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து லவ்வர் திரைப்படம் அதற்கு பிறகு இப்போது சமீபத்தில் அவரது நடிப்பில் குடும்பஸ்தன் திரைப்படம் வெளியாகியது.

actor-manikandan

actor-manikandan

விடாமுயற்சி திரைப்படம் வெளியான பிறகும் கூட இன்னமும் குடும்பஸ்தன் திரைப்படம் பல திரையரங்குகளில் ஓடி கொண்டுள்ளது. அந்த அளவிற்கு அந்த திரைப்படத்திற்கு வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது. இந்த திரைபப்டத்தில் ஒரு சேட் கதாபாத்திரத்தில் நடிகர் அபிலாஷ் நடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிப்பரப்பான மை டியர் பூதம் நாடகத்தில் மூசா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் இதுக்குறித்து பேட்டியில் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும்போது மை டியர் பூதத்திற்கு பிறகு நான் தொடர்ந்து பல வருடங்களாக நடிக்க முயற்சி செய்தேன், ஆனால் பல இடங்களில் என்னை நிராகரித்து வந்தனர். இப்போது இவ்வளவு பிரபலமானதற்கு பிரசன்னா சார், இயக்குனர் மற்றும் நடிகர் மணிகண்டனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

மணிகண்டன் போல நல்ல குணமுள்ள ஒரு இயக்குனரை பார்ப்பது கடினம். கடந்து வந்த பாதையில் பல வலிகள் இருந்தன. ஆனால் இப்போதும் திரையரங்கில் என்னை பார்ப்பவர்கள் டேய் இவன் மை டியர் பூதம் மூசா டா என கூறுகின்றனர்.

அவர்கள் மத்தியில் இன்னும் என் முகம் நினைவிருக்கிறது. அதுவே எனக்கு மகிழ்ச்சிதான் என கூறியுள்ளார் அபிலாஷ்.

 

To Top