ப்ளடி பெக்கர், ப்ரதர் வசூல் போட்டியில் இப்போ யார் முன்னணி?..

தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் தற்சமயம் அதிக வசூலை பெற்று வரும் திரைப்படமாக அமரன் திரைப்படம் இருந்து வருகிறது.

ஆனால் அமரன் திரைப்படத்திற்கு பிறகு மூன்று திரைப்படங்கள் தமிழில் வெளியானது அதில் ப்ளடி பெக்கர், லக்கி பாஸ்கர் மற்றும் பிரதர் திரைப்படங்கள் முக்கியமானவை.

தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர் கவினின் நடிப்பில் ப்ளடி பெக்கர் திரைப்படம் வெளியானது. அதேபோல நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் பிரதர் திரைப்படம் வெளியானது. ஒரு சில திரைப்படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகராக மாறி இருக்கிறார் கவின்.

brother
brother
Social Media Bar

பிளடி பெக்கர் வசூல்:

ஆனால் அதற்குள்ளாகவே தீபாவளி அன்று பெரும் நடிகர்களுடன் போட்டி போடும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார் நடிகர் கவின். அதே சமயம் கவினுக்கு வெகு காலங்கள் முன்பிருந்தே ஜெயம் ரவி சினிமாவில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்கள் இருவரில் யாருடைய திரைப்படம் அதிக வசூலை கொடுத்தது என்கிற ஒரு கேள்வி எழுந்தது. இதுவரை பிளடி பெக்கர் திரைப்படம் 4 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் ஜெயம் ரவி நடித்த பிரதர் திரைப்படமும் நான்கு கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.