News
நொட்டு சாக்கு சொல்றேன்னு எதுனா பேச வேண்டியது.. இந்தியன் படத்தால் கடுப்பான பாபி சிம்ஹா
Indian movie: தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் தான் இயக்குனர் சங்கர். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும்.
மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படங்களாக அமையும். இதுவரை அவர் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இந்தியன்
அந்த வரிசையில் 1996-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் இந்தியன். இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து இருந்தனர்.
ஏ. எம். ரத்னம் தயாரித்த இப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் அன்றைய காலகட்டத்தில் வசூல் சாதனை படைத்தது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் ஐீலை 12 அன்று வெளியானது.
ஆனால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் இப்படம் பெற்றது. எனவே பலரும் இந்த படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.
பதிலடிக் கொடுத்த பாபி சிம்ஹா
இந்த நிலையில் இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பாபி சிம்ஹா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்மறை விமர்சனங்கள் பற்றி அவர் கூறுகையில், இந்தியன் 2 திரைப்படம் சில அறிவாளிகளுக்கு மட்டும் தான் பிடிக்கவில்லை, சில அறிவாளிகள் எது நன்றாக இருந்தாலும் அதை ஒப்புக்கொள்ள முடியாமல் ஏதாவது ஒரு குறை கண்டுபிடிப்பார்கள், அப்படிப்பட்ட அறிவாளிகளை எல்லாம் நாம் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்தியன் 2 படத்திற்கு கூட்டம் கூட்டமாக குடும்ப ஆடியன்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியன் 2 திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
