நான் சந்திரமுகில நடிச்சே தீருவேன்! – அடம் பிடித்த பாலிவுட் நடிகை!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை ஓடி சாதனை படைத்த திரைப்படம் சந்திரமுகி. இந்த படம் இயக்குனர் பி.வாசுவிற்கு ஒரு முக்கிய படமாகும். 

தற்சமயம் பி.வாசு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். தாம் தூம் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கங்கனா ரணாவத் இதில் முக்கிய நாயகியாக நடிக்கிறார்.

இதில் கங்கணா ரணாவத் நடிப்பதில் ஒரு சுவாரஸ்யமான முன் கதை உண்டு. ஏற்கனவே ஒரு பாலிவுட் திரைப்படத்தை இயக்கலாம் என முடிவெடுத்திருந்தார் பி.வாசு. அந்த படத்தில்தான் கங்கனா ரனாவத்தை கதாநாயகியாக்க முடிவெடுத்திருந்தார்.

அதற்காக கங்கனா ரணாவத்தை சந்திக்க சென்றிருந்தார் வாசு. அப்போது எதார்ச்சையாக சந்திரமுகியின் இரண்டாம் பாக வேலைகள் போய்க்கொண்டிருப்பதை கூறியுள்ளார் வாசு.

கங்கனா ரனாவத்திற்கு சந்திரமுகி முதல் பாகமே மிகவும் பிடித்த படமாம். எனவே மிகவும் ஆவலாக இரண்டாம் பாகத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என அவர் கேட்க, இயக்குனர் பி.வாசுவும் நடிகர்கள் குறித்த விவரங்களை கூறி கூடுதலாக இன்னும் முக்கியமான ஒரு கதாபாத்திரம் முடிவாகவில்லை என கூறியுள்ளார்.

உடனே கங்கனா ரணாவத் நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என கூறி மகிழ்ச்சியுடன் சந்திரமுகி படக்குழுவில் இணைந்தாராம்.

Refresh