Connect with us

படப்பிடிப்பில் நடந்த அசாம்பிவிதம்தான் இறப்புக்கு காரணமா!.. போண்டா மணியின் உயிரை காவு வாங்கிய படப்பிடிப்பு!..

bonda mani

News

படப்பிடிப்பில் நடந்த அசாம்பிவிதம்தான் இறப்புக்கு காரணமா!.. போண்டா மணியின் உயிரை காவு வாங்கிய படப்பிடிப்பு!..

Social Media Bar

இந்த வருடம் துவங்கியது முதல் தொடர்ந்து காமெடி நடிகர்களை இழந்து வருகிறது தமிழ் சினிமா. தமிழ் சினிமாவில் பல காமெடிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் போண்டாமணி. அதிகமாக இவரை வடிவேலு மற்றும் விவேக் காமெடிகளில் பார்க்க முடியும்.

வாய்ப்புகளை குறைவாக பெற்று வந்தாலும் அவ்வப்போது தமிழ் சினிமாவில் சில படங்களில் போண்டாமணி தொடர்ந்து நடித்து வந்து கொண்டிருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த போண்டாமணி சில நாட்களாகவே அதற்கு சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென மயக்கம் போட்டு விழுந்த போண்டா மணி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே இறந்து விட்டார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும் நடிகர்களுக்கு இருக்கும் மதிப்பும் பாதுகாப்பும் சின்ன நடிகர்களுக்கு இருப்பதில்லை. டூப் போடும் நடிகர்கள் பலர் உயிரை பணயம் வைத்துதான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் உதாரணத்திற்கு நடிகர் மொட்டை ராஜேந்திரன் படப்பிடிப்பில் ஒரு கெமிக்கல் நீரில் விழுந்ததால்தான் அவரது உடலில் உள்ள முடிகளை இழந்தார். அதேபோன்ற சம்பவம்தான் போண்டாமணியின் இறப்பிற்கும் காரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

அவரே இது குறித்து ஒரு பேட்டியில் முன்பு கூறியிருக்கிறார். பருவ காதல் என்ற ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்த படத்தில் இவர் சாக்கடையில் விழுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்பொழுது அந்த காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரை நிஜ சாக்கடையில் விழ வைத்துள்ளனர் பட குழுவினர்.

இதுவே பெரும் கதாநாயகனாகவோ பெரும் நடிகராகவோ இருந்திருந்தால் இந்த சினிமா இப்படி செய்திருக்காது. ஆனால் சின்ன நடிகர் என்பதால் போண்டாமணியை குதிக்க வைத்தனர். அந்த சாக்கடையில் குதித்த பொழுது சாக்கடை தண்ணீர் அவரது உடலுக்குள் பரவியதால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த சமயத்திலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அப்போதுதான் அவருடைய சிறுநீரகத்திலும் பிரச்சனை இருப்பதை மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்சமயம் சிறுநீரகம் இரண்டும் செயல் இழந்ததால் தான் போண்டாமணி இறந்துள்ளார்.

போண்டாமணியின் இறப்பிற்கு அந்த படப்பிடிப்பு தான் முக்கிய காரணம் என்று தெரிகிறது. தொடர்ந்து சினிமா நடிகர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு தன்மை இன்னமும் தமிழ் சினிமாவில் ஏற்பட்டுக் கொண்டிருப்பது ஒரு துயரமான விஷயம் தான். இந்த நிகழ்வு குறித்து நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா என்று மக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

To Top