Cinema History
கடைசி காலத்தில் இவ்வளவு கஷ்டமா!.. கே.எஸ் ரவிக்குமாரிடம் எல்லாம் கெஞ்சிய போண்டா மணி!.. அவ்வளவுதான் சினிமா…
Actor Bonda Mani: சினிமாவை பொறுத்தவரை எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கூட அவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லை என்கிற நிலையில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது. சினிமாவில் பெரும் ஜாம்பவான்களாக இருந்த சந்திரபாபு சாவித்திரி மாதிரியான பிரபலங்களே வாய்ப்பை இழந்து கடைசி காலத்தில் கஷ்டப்பட்டுள்ளனர்.
அப்படி இருக்கும்போது சின்ன நடிகர்கள் நிலையை தனியாக சொல்ல தேவையில்லை. வடிவேலுவோடு சேர்ந்து காமெடி செய்யும் முக்கிய நடிகர்களில் போண்டா மணியும் ஒருவர். போண்டா மணியின் காமெடிக்கு நல்ல வரவேற்புகள் இருந்தாலும் வடிவேலு சான்ஸ் கொடுத்தால்தான் அவர் நடிக்க முடியும் என்கிற நிலை இருந்தது.

இந்த நிலையில் வடிவேலுவுக்கே சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனப்போது போண்டா மணிக்கும் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் மிகுந்த வறுமையில் இருந்தார் போண்டா மணி. இந்த நிலையில் அவருக்கு நடிகர் சந்தானம் வாய்ப்பளித்து வந்தார்.
சந்தானம் மூலமாக ஒரு சில படங்களில் நடித்து வந்தார் போண்டா மணி இந்த நிலையில் ஒரு முறை பேட்டியில் விரக்தியாக பேசிய அவர் எவ்வளவோ படங்களில் வாய்ப்பு பெற்று நடித்த நான் இப்போது ஒவ்வொரு இயக்குனரிடமும் வாய்ப்பு கேட்டு அலைந்து வருகிறேன். இடையில் கே.எஸ் ரவிக்குமார் சாரிடம் கூட கெஞ்சிவிட்டு வந்தேன் என மனம் வருந்தி கூறியிருந்தார்.
அவர் இறந்தப்போது கூட அவரது குடும்பம் கஷ்டத்தில் இருந்ததால் விஜயகாந்த் வீட்டில் இருந்து அவருக்கு பணம் சென்றது.
