Connect with us

விஜய் அரசியலுக்கு வந்ததால் தமிழக அரசியலுக்கு அந்த ஆபத்து இருக்கு… வார்னிங் கொடுத்த போஸ் வெங்கட்.!

Latest News

விஜய் அரசியலுக்கு வந்ததால் தமிழக அரசியலுக்கு அந்த ஆபத்து இருக்கு… வார்னிங் கொடுத்த போஸ் வெங்கட்.!

Popular Tamil actor Vijay started a party called T.V.K. Ever since he started the party, there have been many positive and negative reviews about Vijay. Actor Bose Venkat also expressed his opinion in that regard

விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதலே அதற்கு ஆதரவான கருத்துக்கள் அதிகமாக இருந்து வந்தது. அதனை தொடர்ந்து விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரையும் அதன் கொடியையும் அறிவித்தார்.

எப்போது விஜய் கொடியை அறிவித்தாரோ அப்போதிலிருந்தே எதிர்மறையான கருத்துக்கள் அதிகமாக உருவாக துவங்கின. ஒரு நடிகர் அரசியலுக்கு வருவது சரியா என்பது எப்போதுமே மக்கள் மத்தியில் இருந்து வரும் கருத்தாக தான் இருக்கிறது.

ஆனால் ஜனநாயக இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பதால் விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தப்பு என்பது ரசிகர்களின் கண்ணோட்டமாக இருந்து வருகிறது.

போஸ் வெங்கட்டின் கருத்து:

இதற்கு பலரும் பல விதமான விமர்சனங்களை அளித்து வந்த நிலையில் பிரபல சினிமா நடிகரான போஸ் வெங்கட்டும் விஜய்யின் அரசியல் நகர்வு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அவருமே விஜய்க்கு எதிர்மறையான கருத்துக்களை தான் அளித்திருந்தார்.

இந்த நிலையில் அது அதிக வைரலாக துவங்கி இருந்தது. பிறகு சமீபத்தில் போஸ் வெங்கட் பேட்டி கொடுத்தபொழுது அவர் சில விஷயங்களை விளக்கி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது எப்படியும் தமிழகத்தில் உள்ள இரண்டாவது பெரிய கட்சி நடிகர் விஜயுடன் கூட்டணி போடும்.

கூட்டணி போடும்போது துணை முதலமைச்சர் பதவி எங்களுக்கு வேண்டும் என்று கூறி தான் கூட்டணி போடுவார்கள். மேலும் சில ஜாதி கட்சிகள் தமிழகத்தில் இருக்கின்றன. அவர்களும் கூட்டணி போடுவார்கள் அவர்களும்  அதிகாரத்தில் பங்கு கேட்பார்கள் அப்படி என்றால் 2026 தேர்தலே ஒரு கேள்வி குறி ஆக்கிவிடும் என்று கூறியிருக்கிறார் போஸ் வெங்கட்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top