விஜய் டிவியை எதிர்ப்போம்! – விஜய் டிவிக்கு எதிராக குவிந்த விக்ரமன் ஆர்மி!
தற்சமயம் விஜய் டிவியில் பரபரப்புடன் ஓடி கொண்டிருந்த தொடர்தான் பிக்பாஸ். பிக்பாஸ் தொடருக்கு எல்லா வருடமுமே ஒரு பெரும் பார்வையாளர்கள் கூட்டம் இருப்பதுண்டு. இந்த வருடமும் கூட பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்து வந்தனர்.

இதில் அசிம் என்பவர் மீது நிகழ்ச்சி ஆரம்பம் முதலே பல விதமான சர்ச்சைகள் நிலவி வந்தன. ஒவ்வொரு வாரமும் எதாவது பிரச்சனை செய்துக்கொண்டே இருந்தார் அசிம். ஆனாலும் இறுதி வாரம் வரை அசிம் வந்து கொண்டிருந்தார்.
நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாள். ஷிவின், அசிம், விக்ரமன் மூவரும் இறுதியாக இருந்தனர். இதில் ஷிவின் அல்லது விக்ரமன்தான் வெற்றி பெறுவார்கள் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த வகையில் நேற்று அசிம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து இணையத்தில் #boycottvijaytv என்னும் ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதே சமயம் அசிமின் ரசிகர்கள் அவரது பெயரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.