News
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸில் இணையும் கேப்டன் மார்வல் – இது உண்மைதானா
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் அடுத்த திரைப்படத்தில் கேப்டன் மார்வெல் கதாநாயகி இணைவதாக கூறப்படுகிறது.
ஹாலிவுட்டில் மட்டுமின்றி இந்தியாவிலும் கூட மிகவும் பிரபலமான திரைப்படமாக ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படங்கள் உள்ளன. விண்டீசல் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் இந்த திரைப்படம் இதுவரை 9 பாகங்கள் வந்துள்ளன.

காரை கொண்டு செய்யப்படும் ஆக்ஷன் காட்சிகள் மீது ஆவல் கொண்டு பலரும் இந்த படங்களுக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். டாமினிக் டெரேட்டோ என அழைக்கப்படும் கதாநாயகன் மற்றும் அவனது குழு சேர்ந்து செய்யும் சாகசங்களே ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படங்கள்.
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியசின் அடுத்து வரும் 10 ஆம் பாகத்தில் அவர்களுடன் கேப்டன் மார்வெல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ப்ரி லார்சனும் நடிக்க உள்ளதாக விண்டீசல் தெரிவித்துள்ளார்.
மார்வெல் கதாபாத்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கதாபாத்திரமான கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ஏற்கனவே அதிக ரசிகர்களை கொண்டுள்ள ப்ரீ லார்சன், இதன் மூலம் ரசிகர்கள் ஆவலை மேலும் அதிகரித்துள்ளார்.
