Movie Reviews
விஜய் இல்லைன்னா படம் ஒன்னுமே இல்ல?? – பீஸ்ட் ரசிகர்கள் விமர்சனம்!
விஜய் நடித்து இன்று வெளியான பீஸ்ட் படத்திற்கு வரவேற்பு குவிந்துள்ள நிலையில் இந்த படம் குறித்து ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. காலை 4 மணிக்கே ரசிகர் மன்ற காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வைரலாகியுள்ளது.
படம் முழுக்க விஜய் தனது முழு பலத்துடன் இயங்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார். விஜய் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட விஜய்யின் பக்கா ஆக்ஷன் மெட்டீரியல் இது என கூறுகிறார்கள்.
அதுவும் அரபிக்குத்து பாடலில் விஜய்யின் டான்ஸ் இதுவரை விஜய் இப்படி டான்ஸ் ஆடி பார்த்ததே இல்லை என்னும் வகையில் ரசிகர்களை கொண்டாட்டத்தில் தள்ளியுள்ளது.
கதை, திரைக்கதை பொறுத்தவரை ஏற்கனவே அதிகம் பார்த்து பழக்கப்பட்ட ஹாலிவுட் ரகம்தான் எனும்போது பெரிய ட்விஸ்டுகள் எதுவும் இல்லை. காமெடிக்கு மிகவும் பிரயத்தனப்பட்டுள்ள நிலையில் ஆங்காங்கே சில காமெடிகள் ஒர்க் அவுட் ஆகியுள்ளன.
எந்த விதமான விறுவிறுப்பும் இல்லாமல் சில இடங்களில் காட்சிகள் இருந்தாலும் விஜய் அந்த காட்சிகளை பூர்த்தி செய்துள்ளார். இசையில் அனிருத் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாக படம் மனநிறைவை கொடுத்துள்ளது. என்றாலும் விஜய்யே மொத்த படத்தின் வேல்யூவையும் தூக்கி சுமக்க வேண்டியதாக உள்ளதாக திரை விமர்சகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
முழு உழைப்பை தறேன்.. மீதி உங்க பொறுப்பு! – நெல்சனை நம்பிய விஜய்!