News
உங்களுக்காக இந்தி கத்துக்க முடியாது! – சர்ச்சையான பீஸ்ட் விஜய் டயலாக்!
விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் இந்தி குறித்த வசனம் இடம்பெற்றுள்ளது வைரலாகியுள்ளது.

நடிகர் விஜய் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. காலை 4 மணிக்கே ரசிகர் மன்ற காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வைரலாகியுள்ளது.
படத்தில் ஒரு காட்சியில் விஜய்யிடம் சிலர் இந்தியில் பேசுவதாகவும், அதற்கு விஜய் “உங்களுக்காக நான் இந்தி கத்துக்க முடியாது. வேணும்னா நீங்க தமிழ் கத்துக்கோங்க” என்று சொல்வதாக வசனம் இடம்பெற்றுள்ளது.

அதுபோல இன்னொரு காட்சியில் “நான் அரசியல்வாதி இல்ல.. நான் ஒரு சோல்ஜர்” என்று சொல்லும் வசனமும் உள்ளது.
வழக்கமாகவே விஜய் படங்களில் இதுபோன்ற அரசியல் வசனங்கள் இடம்பெறும். தற்போது இந்தி திணிப்பு சர்ச்சை தமிழ்நாட்டில் பெரிதாகி வரும் நிலையில் விஜய்யின் இந்த டயலாக் வைரலாகியுள்ளது.
பீஸ்ட் தியேட்டரில் அஜித்துக்கு கட் அவுட்! – அஜித் ரசிகர்கள் செய்த காரியம்!
