Category Archives: Box Office

பொங்கலையே கலவரமாக்கிய மத கஜ ராஜா… 10 நாள் வசூல் நிலவரம்..!

பொங்கல் மற்றும் தீபாவளி மாதிரியான சிறப்பு தினங்கள் எல்லாம் தொடர்ந்து படங்கள் வெளியிடுவதற்கான தினங்களாக உள்ளன. அதிலும் 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் பல படங்களை பொங்கலுக்கு வெளியிடவே திட்டமிடுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஆரம்பத்தில் விடாமுயற்சி திரைப்படம்தான் திரைக்கு வர இருந்தது. ஆனால் விடாமுயற்சி பட வேலைகள் முடியாத காரணத்தால் அந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. மாறாக பிப்ரவரி 6 ஆம் தேதி அந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு காத்திருப்பில் இருந்த நிறைய திரைப்படங்கள் களம் இறங்கின. அப்படியாக களம் இறங்கிய திரைப்படங்களில் மதகஜராஜா திரைப்படமும் ஒன்று.

12 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அதிக நகைச்சுவையுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் மதகஜ ராஜா. இதனால் பொங்கல் ரேசில் மற்ற படங்களை முறியடித்து மத கஜ ராஜா முதல் இடத்தை பிடித்தது.

இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு கூட மதகஜ ராஜா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் இந்த படம் இயக்குனர் சுந்தர் சி, விஷால், அஞ்சலி ஆகியோருக்கு முக்கிய படமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் இதுவரையில் 46 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மத கஜ ராஜா. படத்தின் வசூல் இன்னமுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்கெட்டே போச்சா!.. வணங்கான் 9 நாள் வசூல் நிலவரம்.!

தமிழில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை கொண்டு திரைப்படம் இயக்கும் இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் பாலா. ஒரு காலக்கட்டத்தில் இயக்குனர் பாலா இயக்கும் படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வந்தது.

அவர் இயக்கிய அவரது முதல் திரைப்படமான சேது திரைப்படமே எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து பாலாவுக்கு வாய்ப்புகளும் அதிகரிக்க துவங்கியது. ஆனால் அவர் இயக்கத்தில் வந்த தார தப்பட்டை திரைப்படம் எதிர்பார்த்த வர்வேற்பை பெறவில்லை.

அது பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அடுத்து ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய நிலையில் இருந்து வருகிறார் பாலா. அப்படியாக சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் வணங்கான்.

வணங்கான் திரைப்பம் உருவாவதிலேயே நிறைய பிரச்சனைகள் இருந்தன. ஆரம்பத்தில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் சூர்யாதான் நடித்து வந்தார். ஆனால் படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சூர்யா அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

பிறகு அருண் விஜய் அதில் கதாநாயகனாக நடித்தார். இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 9 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 8.5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படியே போனால் வணங்கான் வசூல் சாதனை படைப்பது கடினம் என கூறப்படுகிறது.

 

அரண்மனை 4க்கே டஃப் கொடுக்கும் போல.. வாய் பிளக்க வைத்த 5 நாள் வசூல்.. மாஸ் காட்டும் மதகஜராஜா.!

நடிகர் விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பே உருவாகி தற்சமயம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படமாக மதகஜராஜா திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இந்த அளவிலான வரவேற்பு கிடைக்கும் என்பது இயக்குனர் சுந்தர் சியே எதிர்பார்க்காத விஷயமாகும்.

பெரும்பாலும் 10 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு இப்போது இப்படி ஒரு வரவேற்பு கிடைப்பது அதிசயமான விஷயம்தான். ஏனெனில் 10 வருடங்களுக்கு முன்பு இருந்த தொழில்நுட்பம் வேறு இப்போது இருக்கும் தொழில்நுட்பம் வேறு.

அந்த அளவிற்கு சினிமாவில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஆனால் அதே சமயம் காமெடி திரைப்படங்கள் வெளியாவதே இப்போது குறைந்துவிட்டது. அதே சமயம் எப்போதுமே மக்கள் காமெடி படங்களை விரும்பி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருந்ததால் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 28 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மதகஜராஜா திரைப்படம். அரண்மனை 4 திரைப்படம் மொத்தமாகவே 100 கோடி ரூபாய்தான் வெற்றி கொடுத்தது. ஆனால் மதகஜராஜா அதனை தாண்டி வசூல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கலுக்கு கேம் சேஞ்சராக அமைந்த மதகஜராஜா… மூன்றாவது நாள் நடந்த அதிசயம்.. வசூல் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. ஏனெனில் ஆக்‌ஷன் திரைப்படங்களை இயக்குவதற்கு தமிழில் நிறைய இயக்குனர்கள் இருக்கின்றனர். ஆனால் காமெடி திரைப்படங்களை இயக்குவதற்கு சுந்தர் சி மாதிரியான இயக்குனர்கள்தான் இருக்கிறார்கள்.

சுந்தர் சி 12 வருடங்களுக்கு முன்பு இயக்கிய திரைப்படம் மதகஜராஜா. தற்சமயம் பொங்கலை முன்னிட்டு பல படங்கள் வெளியானது. அதில் மதகஜராஜா திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். ஜனவரி 12 அன்று வெளியான மதகஜராஜா முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து அதன் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மதகஜராஜா.

பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே தற்சமயம் அதிக வசூல் கொடுத்த தமிழ் படமாக மதகஜராஜாதான் இருந்து வருகிறது. மதகஜராஜா வெளியான முதல் நாள் 3 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாளும் 3 கோடிதான் வசூலித்தது.

ஆனால் மூன்றாவது நாள் மட்டும் கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இதன் வசூல் அதிகரித்தால் கண்டிப்பாக 100 கோடி ரூபாய் வசூல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படமாச்சும் ரவி மோகனை காப்பாத்துச்சா.. காதலிக்க நேரமில்லை முதல் நாள் வசூல் ரிப்போர்ட்.!

கடந்த சில வருடங்களாகவே நடிகர் ரவி மோகனுக்கு தொடர்ந்து சொல்லி கொள்ளும் வகையில் வெற்றி படங்கள் என எதுவும் அமையவில்லை.

அவர் சமீப காலமாக நடித்த அகிலன், இறைவன், சைரன் மாதிரியான எந்த படங்களுமே அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ப்ரதர் என்கிற திரைப்படத்தில் நடித்தார் ரவி மோகன்.

பொதுவாக ராஜேஷ் நன்றாக காமெடி திரைப்படங்கள் எடுக்க கூடியவர்தான். அவர் இயக்கும் படங்களுமே நல்ல வெற்றியைதான் கொடுக்கும். ஆனால் ப்ரதர் திரைப்படத்தை பொறுத்தவரை அதில் காமெடி காட்சிகளே பெரிதாக இல்லை. முழுக்க முழுக்க சீரியஸான கதையாக இருந்தது.

இதனால் இந்த படத்திற்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை.இந்த நிலையில் அடுத்து இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் நடித்த திரைப்படம் காதலிக்க நேரமில்லை.

இந்த திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. இதற்கு நடுவே பொங்கல் என்பதால் கண்டிப்பாக படத்திற்கு அதிக வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் நேற்று 2.35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

வசூல் ரீதியாக இது குறைவு என்றாலும் கூட இந்த மாதம் விடுமுறை நாட்கள் அதிகமாக இருப்பதால் இந்த படத்திற்கு நிறைய வரவேற்புகள் கிடைக்கலாம் என பேச்சுக்கள் இருக்கின்றன.

12 வருசம் கழிச்சி வந்த படத்துக்கு இவ்வளவு மார்க்கெட்டா? புதிய சாதனையை படைத்த மதகஜராஜா திரைப்படம்.!

வெகு வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனாலேயே இப்போதெல்லாம் ரீ ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் தனிப்பட்ட வரவேற்பை பெறுகின்றன. இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களாக ரீ ரிலீஸ் ஆகாமல் இருந்த படமாக மதகஜ ராஜா திரைப்படம் இருந்து வந்தது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சந்தானம், மனோபாலா, அஞ்சலி, வரலெட்சுமி இன்னம் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சந்தித்த சில பிரச்சனைகளின் காரணமாக அந்த திரைப்படம் திரைக்கு வராமலேயே இருந்தது.

ஆனால் திடீரென இந்த மாதம் படம் வெளியாவதாக அறிவிப்பு வந்தது. அதனை தொடர்ந்து அந்த படம் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் படத்தில் நடித்த அஞ்சலிக்கும் இந்த படம் நல்ல மார்க்கெட்டை பிடித்து கொடுத்தது.

இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு விடுமுறை நாட்கள் அதிகமாக இருப்பதால் மதகஜ ராஜா திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் மதகஜ ராஜா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

அதாவது மதகஜராஜா திரைப்படம் கடந்த 24 மணி நேரத்தில் ஆன்லைன் மூலமாக 75,000 டிக்கெட்கள் புக் செய்யப்பட்டுள்ளன. 12 வருடம் கழித்து வந்த படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது பெரிய விஷயம் என கூறப்படுகிறது.

தட்டி தூக்கியதா மதகஜ ராஜா… முதல் நாள் வசூல் நிலவரம்..!

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி எதிர்பாராத வரவேற்பை பெற்றுள்ளது மதகஜ ராஜா திரைப்படம். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சந்தானம், அஞ்சலி, வரலெட்சுமி இன்னும் பலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் முழுக்கவே காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 12 வருடங்களுக்கு முன்பு ஜெமினி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் மதகஜராஜா.

இந்த திரைப்படம் சில பிரச்சனைகளால் வெகு காலங்களாகவே வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த 12 வருடங்களில் சினிமாவில் காமெடி படங்கள் பெரிதாக உருவாகாமல் போனது.

இந்த நிலையில் இவ்வளவு காமெடி காட்சிகள் நிறைந்த படம் என்பதாலேயே மதகஜராஜா முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு அளவில் குறைவான திரையரங்குகளில் வெளியானது என்றாலும் கூட 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

பட்ஜெட் ரீதியாக இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட் படம் என்பதால் இதுவே படத்திற்கு நல்ல வெற்றி என கூறப்படுகிறது.

இந்தியன் 2 வை மிஞ்சிய கேம் சேஞ்சர்.. முதல் நாள் வசூல் நிலவரம்.!

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். தொடர்ந்து ஷங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது.

ஆனால் சமீபத்தில் வந்த இந்தியன் 2 திரைப்படம் இயக்குனர் ஷங்கரின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் படமாக அமைந்தது. அதுவரை இயக்குனர் ஷங்கர் இயக்கிய எந்த ஒரு திரைப்படமும் இவ்வளவு மோசமான தோல்வியை கண்டது இல்லை.

இதனால் அடுத்து ஷங்கர் இயக்கும் திரைப்படம் கண்டிப்பாக வெற்றி திரைப்படமாக இருக்க வேண்டும் என்கிற இருந்து வந்தது. இந்த நிலையில்தான் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படம் உருவானது.

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் அரசியல் கதை களங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ராம்சரண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவும் எஸ்.ஜே சூர்யா அரசியல் வாதியாகவும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் நேற்று ஒரு நாளில் கேம் சேஞ்சர் திரைப்படம் கிட்டத்தட்ட 47 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூலை விட இது அதிகம் என கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு ராம்சரண் நடித்த வினய வித்ய ராமா திரைப்படத்தை விடவுமே இது அதிக வசூலை கொடுத்துள்ளது என கூறப்படுகிறது.

ஷங்கர் கதையில் கை வைத்ததா கங்குவா படம்? ஏற்கனவே ஷங்கர் கொடுத்த வார்னிங்.. அடுத்து என்ன நடக்க போகுதுன்னு தெரியலையே.!

kanguwa is the most popular movie released in theaters today. Did the film live up to the already overwhelming response to the movie kanguwa? It is known only by today’s collection.

இன்று திரையரங்குகளில் வெளியாகி தற்சமயம் அதிக வரவேற்பு பெற்று வரும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருந்து வருகிறது. கங்குவா திரைப்படம் குறித்து ஏற்கனவே நிறைய வரவேற்புகள் இருந்த நிலையில் அதை படம் பூர்த்தி செய்ததா? என்பது இன்றைய நாள் வசூலை வைத்து தான் தெரியும் என்கிற நிலை இருந்து வருகிறது.

இந்த படம் கண்டிப்பாக 2000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்பது இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் எண்ணமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கும் இயக்குனர் ஷங்கர் அடுத்து எடுக்க போகும் திரைப்படத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஒரு பிரச்சனை எழுத்திருக்கிறது.

kanguva

ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் வேள்பாரி நாவலை திரைப்படம் ஆக்குவதற்கான வேலையில் இறங்கி இருக்கிறார். அந்த படத்தை மூன்று பாகங்களாக எடுப்பதற்கு திட்டமிட்டு அதற்கான திரைகதை வேலைகளையும் முடித்திருக்கிறார்.

ஷங்கர் படத்தின் கதை:

இந்த நிலையில் வேள்பாரி நாவலில் வரும் நிறைய காட்சிகள் இப்பொழுது சமீப காலங்களாக படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேவரா திரைப்படத்தில் கூட அப்படியான ஒரு காட்சி பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து அப்பொழுதே சங்கர் அவருக்கு வார்னிங் கொடுக்கும் விதமாக இனி என்னுடைய வேள்பாரி கதையில் வரும் காட்சிகளை யாரும் காப்பி அடிக்க கூடாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தில் வேள்பாரி நாவலில் வருவது போன்ற காட்சிகள் நிறைய இடம்பெறுவதாக ஒரு பேச்சு இருக்கிறது.

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக சங்கர் அது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

 

வசூலில் இதுதான் உங்க இடமா? ப்ளடி பெக்கர், ப்ரதர் படத்தின் 5 நாள் கலெக்‌ஷன்..!

Jayam Ravi Starrer Brother and kavin Starrer Bloody Beggar Collection Details in Five Days of Release

இந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களில் பின்னடைவை சந்தித்த திரைப்படங்களாக பிளடி பெக்கர் திரைப்படமும் பிரதர் திரைப்படமும் இருந்து வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெகு காலங்களுக்குப் பிறகு காமெடி திரைப்படமாக வெளியான திரைப்படம் பிரதர். அதேபோல தொடர்ந்து வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கவின் நடிப்பில் வெளியான மற்றும் ஒரு வித்தியாசமான திரைப்படமாக ப்ளடி பெக்கர் திரைப்படம் இருந்தது.

பட வசூல்:

bloody beggar

இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் கூட வெளியான முதல் நாளே அந்த படத்திற்க்கான வரவேற்பு குறைந்தது. பிரதர் திரைப்படமும் அதே போல பெரிதாக வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையில் இதுவரை 6 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது பிளடிபக்கர் திரைப்படம்.

அதேபோல பிரதர் திரைப்படம் வெளியான ஐந்து நாட்களில் எட்டு கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. இரண்டு திரைப்படத்திற்குமே பட்ஜெட் கொஞ்சம் அதிகம் தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் பட்ஜெட்டை கூட இந்த படங்கள் வசூல் செய்யா பட்சத்தில் இவை தோல்வி படங்களாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.

அமரன் 5 நாள் வசூல் ரிப்போர்ட்… வசூல் கிங்காக மாறிய சிவகார்த்திகேயன்..!

Full details of Sivakarthikeyan starrer Amaran’s collection in five days of its release

தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களில் தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என்று மற்ற மொழிகளிலும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் திரைப்படம்.

இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே பெரிதாக கொண்டாடப்படும் திரைப்படமாக அமரன் திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்திற்காக நிறையவே உழைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நிஜ ராணுவ வீரர்கள் எப்படி இருப்பார்களோ அதே மாதிரியான தோற்றத்தை கொண்டு வருவதற்காக உடற்பயிற்சியில் துவங்கி நிறைய விஷயங்களை சிவக்கார்த்திகேயன் செய்திருக்கிறார்.

படத்தின் வசூல்:

sivakarthikeyan

இந்த நிலையில் அவரது உழைப்புக்கு ஊதியமாக பெரும் வசூலை கொடுத்திருக்கிறது அமரன் திரைப்படம். ஏற்கனவே படம் வெளியாகிய ஐந்து நாட்களான நிலையில் மொத்தமாக உலக அளவில் 140 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது அமரன் திரைப்படம் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் 93 கோடி வசூல் செய்திருக்கிறது மேலும் வெளிநாடுகளில் 45 கோடி வசூல் செய்திருக்கிறது அமரன் திரைப்படம் என்று கூறப்படுகிறது.

அனிமே போட்டியில் களம் இறங்கிய ஜியோ சினிமா!.. அனிமே ரசிகர்களுக்குதான் கொண்டாட்டம்!.

ஜப்பான் அனிமே தொடர்களுக்கு இந்திய மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்புகள் உண்டாகி வருகிறது. கார்ட்டூன் தொடர்களில் இருந்து மாறுப்பட்ட கதையம்சத்தை கொண்டுள்ளன இந்த அனிமே தொடர்கள். இதனால் கார்ட்டூன் பிரியர்களுக்கு தற்சமயம் அனிமே மீது அளவுகடந்த ஈடுபாடு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கார்ட்டூன் நெட்வொர்க்கில் ஒளிப்பரப்பான ட்ராகன் பால் செட், சுட்டி டிவியில் ஒளிப்பரப்பான ஹெய்டி, அவதார் த லாஸ்ட் ஏர்பெண்டர் போன்ற தொடர்கள் எல்லாம் அனிமே தொடர்கள்தான். ஆனால் அவையெல்லாம் அனிமே என்றே தெரியாமல் நாம் அவற்றை பார்த்து வந்தோம்.

ஆனால் தற்சமயம் நருட்டோ, ஒன் பீஸ் மாதிரியான தொடர்களுக்கு தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதை பார்த்து க்ரஞ்சி ரோல், நெட்ப்ளிக்ஸ் மாதிரியான முன்னணி தளங்களே அவற்றை தமிழில் டப்பிங் செய்து வெளியிட துவங்கியுள்ளன.

கொஞ்சம் கொஞ்சமாக அனிமேவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருவதை பார்த்து டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்ற ஓ.டி.டி தளங்களில் தங்கள் தளங்களில் அனிமே தொடர்களை இணைத்து வருகின்றன.

இந்த நிலையில் ஜியோ சினிமாவும் தற்சமயம் 30க்கும் அதிகமான தொடர்களை தனது ஓ.டி.டி தளத்தில் வெளியிட்டுள்ளன. தற்சமயம் Demon Slayer, Spy X Family, Tokyo Revengers, Cells at Work, Goblin Slayer, Junji Ito Collection, Mieruko Chan உள்ளிட்ட பல தொடர்கள் இதில் கிடைக்கின்றன.