Category Archives: Tamil Cinema News

Tamil cinema,Kollywood,movie news,celebrity news,box office,trailers,reviews,Tamil cinema news,

சமூக பிரச்சனையை கையில் எடுத்த பரிதாபங்கள் சேனல்.. இணையத்தில் இப்போ இதான் ட்ரெண்டிங்..!

யூ ட்யூப்பை பொறுத்தவரை ஒரு கேளிக்கைக்கான விஷயமாகதான் யூ ட்யூப் எப்போதும் இருந்து வருகிறது. மக்களும் பெரும்பாலும் கேளிக்கை தொடர்பான விஷயங்களை பார்ப்பதற்காகதான் யூ ட்யூப் வருகின்றனர். இந்த நிலையில் பிரபலமான யூ ட்யூப் சேனல்களில் முக்கியமான சேனலாக பரிதாபங்கள் சேனல் இருந்து வருகிறது.

சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளை காமெடியாக இந்த சேனலில் உள்ள கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் பேசி வருகின்றனர். திருமண பரிதாபங்கள், உறவினர் பரிதாபங்கள், கல்லூரி பரிதாபங்கள் என பலதரப்பட்ட வீடியோக்களை இவர்கள் பதிவிட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் இவர்கள் அரசியல் சார்ந்து நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். பல அரசியல்வாதிகளை காமெடியாக சித்தரித்து அவர்கள் இந்த வீடியோக்களை செய்திருந்தனர். இதனால் இவர்களுக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன.

எனவே அந்த மாதிரி வீடியோக்கள் போடுவதை இவர்கள் நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து சாதிய படுகொலைகள் நடப்பதை தொடர்ந்து சாதிய வாதிகளை குறித்து அவர்கள் உருவாக்கி இருக்கும் வீடியோதான் சொசைட்டி பாவங்கள்.

இந்த வீடியோவிற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.  இப்போது இணையத்தில் இந்த வீடியோ அதிக வைரலாகி வருகிறது.

தமிழில் தேசிய விருதை பெற்ற இரண்டு முக்கிய நடிகர்கள்.. இப்பவாச்சும் கொடுத்தாங்களே..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரும் நடிகர்களின் நடிப்புக்கு எப்போதுமே அதிக மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. அவர்கள் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் கூட அவர்களுக்கான வரவேற்பு என்பது குறைவது கிடையாது.

இந்த மாதிரி பெரிதாக நடிக்க தெரியாமல் அதே சமயம் பெரிய நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். ஆனால் அதே சமயம் துணை கதாபாத்திரங்களாக நடித்தாலும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

பெரிதாக துணை கதாபாத்திரமாக வருபவர்களை நாம் கண்டுக்கொள்ள மாட்டோம். ஆனால் தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தும்போது அவர்களும் கூட தனித்துவமாக தெரிய துவங்குவார்கள். அந்த வகையில் தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் தெரிந்தவர்தான் நடிகர் எம்.எஸ் பாஸ்கர்.

துணை கதாபாத்திரமாக நடித்த இவருக்கு எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை விட அவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் பார்கிங் திரைப்படத்திற்காக சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார் எம்.எஸ் பாஸ்கர்.

அதே மாதிரி பாக்கியராஜ் காலத்தில் இருந்தே நடித்து வருபவர் நடிகை ஊர்வசி. இவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடிய நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கு Ullozhukku என்கிற திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

அஜித் படம் குறித்து வந்த அடுத்த அப்டேட்.. ரேஸ்க்கு போறதுக்கு முன்னாடி எடுத்த ப்ளான்..

நடிகர் அஜித் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அதே சமயம் தொடர்ந்து கார் பந்தயங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அஜித் ஒரு விதிமுறையை பின்பற்றி வருகிறார்.

கார் ரேஸில் கலந்து கொள்ளும் சமயங்களில் அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார். அதே போல திரைப்படங்களில் நடிக்கும் சமயங்களில் கார் ரேஸ் போன்ற பந்தயங்களில் கலந்து கொள்ள மாட்டார். ஏனெனில் கார் ரேஸில் கலந்து கொள்ளும் பொழுது அவருக்கு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அந்த மாதிரி ஏற்பட்டால் படப்பிடிப்புகளில் அது பிரச்சனையை ஏற்படுத்தும் படப்பிடிப்பு முடிவதிலும் தாமதமாகும் என தயாரிப்பாளர் நலனை கருத்தில் கொண்டு அஜித் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.

ஏனெனில் ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பைக் கொடுத்து இருக்கிறார் அஜித்.

இந்த படத்தை எடுப்பதற்கு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாதம் அவகாசம் கொடுத்து இருக்கிறார் அஜித். அந்த வகையில் அக்டோபர் மாதம் துவங்கும் படப்பிடிப்பை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அவருக்கு கூறப்பட்டுள்ளது.

எனவே முதலில் அஜித்துக்கான காட்சிகளை மட்டும் மூன்று மாதத்திற்குள் எடுத்துவிட்டு மீத காட்சிகளை தாமதமாக எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் ஆதிக் ரவிச்சந்திரன்.

அஜித் படம் பெற்ற அதே தகுதியை பெற்ற ஹரிஸ் கல்யாண் படம்.. 

2023 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் பார்க்கிங்.

சாதரணமாக சென்னை போன்ற பெரும் நகரங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. ஆனால் அதையே ஒரு கதைக்களமாக உருவாக்கி அதை வைத்து பெரிய பெரிய விஷயங்களை அந்த திரைப்படத்தில் செய்திருந்தார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

இந்த நிலையில் பார்க்கிங் திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் தற்சமயம் கிடைத்து இருக்கிறது. பெரும்பாலும் அறிமுக இயக்குனர்கள் படங்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தேசிய விருதுகள் கிடைத்துவிடாது. ஆனால் ராம்குமாருக்கு தனது ஆரம்ப நிலையிலேயே இப்படி ஒரு தேசிய விருது கிடைத்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

parking

அவரது சினிமா வாழ்க்கையிலும் இனி தொடர்ந்து அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் இந்திய அளவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றிருக்கிறது இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இந்திய அளவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை காதல் மன்னன் திரைப்படம் பெற்றது.

அந்த திரைப்படத்திற்குப் பிறகு அதே அளவிலான ஒரு தகுதியைப் பெற்றிருக்கிறது ஹரிஷ் கல்யாண் நடித்த பார்கிங் திரைப்படம்.

 

பல பேரிடம் கை மாறிய தலைவன் தலைவி திரைப்படம்.. இப்படி பண்ணிட்டாங்களே..!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்சமயம் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி.

தலைவன் தலைவி திரைப்படத்தைப் பொறுத்தவரை அது வெளியான சமயத்தில் முதலில் அதிகமாக பேசப்படவில்லை என்றாலும் கூட போக போக படத்திற்கான வரவேற்பு என்பது அதிகரிக்க துவங்கியது.

இப்போது திரையரங்குகளில் தொடர்ந்து அதிக வசூல் செய்து வருகிறது தலைவன் தலைவி திரைப்படம். தொடர்ந்து குடும்ப படமாக எடுத்து வரும் பாண்டிராஜ் மீண்டும் எடுத்திருக்கும் குடும்ப திரைப்படம் தான் தலைவன் தலைவி திரைப்படம்.

இதில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் நடிப்பு மிக சிறப்பாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் எவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்தாலும் கூட இந்த கதையை ஆரம்பத்தில் பலரும் நிராகரித்து இருக்கின்றனர்.

குடும்ப திரைப்படங்கள் எல்லாம் இப்போது ஓடாது என்கிற கருத்து பலரது மத்தியில் இருந்து வந்தாலும் கூட தொடர்ந்து குடும்ப படங்களாக எடுத்து ஹிட் கொடுத்து வருகிறார் இயக்குனர் பாண்டிராஜ். அந்த வகையில் தலைவன் தலைவி திரைப்படமும் கூட எதிர்பார்த்த அளவிலான வெற்றியை கொடுத்து வருகிறது.

தற்சமயம் இந்த படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படம் பல தயாரிப்பாளர்களிடம் சென்று பிறகு கைமாறிதான் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் வசம் வந்துள்ளது.

இதற்கு முன்பு இந்த திரைப்படம் மாஸ்டர் லியோ போன்ற திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் லலித் குமாரிடம் சென்றிருக்கிறது. ஆனால் அந்த படத்தை அவர் எடுக்கவில்லை.

பிறகு சக்தி பிலிம்ஸ் ஃபேக்டரி எங்கிருந்த நிறுவனமும் இந்த படத்தை வேண்டாம் என்று கூறியிருக்கிறது. அதேபோல ஜெயம் ரவியின் முன்னாள் மாமியாரிடமும் இந்த கதை சென்று இருக்கிறது. அப்பொழுது இந்த படத்தில் ஜெயம் ரவி தான் கதாநாயகனாகவும் நடிக்க நடிப்பதாக இருந்தது.

ஆனால் பட்ஜெட் ரீதியாக ஏற்பட்ட குழப்பத்தினால் அவரிடம் இருந்தும் விலகி விட்டார் பாண்டிராஜ். இப்படி பலரிடம் கைமாறிதான் கடைசியாக சத்யஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது.

ரொம்ப நாள் கழிச்சி கூலி படத்தில் ரஜினி செஞ்ச விஷயம்.. ட்ரைலரில் கவனிச்சீங்களா..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஏற்கனவே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே ஆக்‌ஷன் திரைப்படங்களை சிறப்பாக இயக்க கூடியவர் என்கிற பெயரை பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் ரஜினிகாந்தை வைத்து அவர் ஒரு படம் இயக்குகிறார் என்றால் அது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்கிற எண்ணம் பலருக்குமே இருந்து வருகிறது. அதற்கு தகுந்தாற் போலவே கூலி திரைப்படமும் அமைந்துள்ளது. ஆக்ஸ்ட் 14 இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்சமயம் வெளியாகி அதிக ட்ரெண்ட் ஆகி வருகிறது. படத்தின் கதையை பார்க்கும்போது ஏதோ ஒரு விஷயத்தை செய்துவிட்டு மறைமுகமாக 30 வருடங்கள் வாழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த் (தேவா).

இந்த நிலையில் அவரை திரும்ப வம்பிழுக்கிறது வில்லன் குழு. அவர்களை எதிர்த்து ரஜினிகாந்த் செய்யும் விஷயங்களே படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் இந்த படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளார்.

சிவாஜி திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது முதலே அவர் புகை பழக்கத்தை விட்டு விட்டார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் அவர் புகை பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளாரே என பேச்சுக்கள் இருக்கின்றன.

ஆனால் திரைப்படத்திற்காக எப்போதாவது ரஜினி புகைப்பிடிப்பதுண்டு. மற்றப்படி அவர் பழக்கமாக இதை பயன்படுத்துவதில்லை எனவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.

 

 

மனைவி அக்கவுண்டுக்கு காசு போனாதான் கால்ஷூட்.. தயாரிப்பாளர்களுக்கு ரூல் போட்ட யோகிபாபு..!

கோலிவுட் சினிமாவில் மிக முக்கியமான காமெடி நடிகர்களில் முக்கியமானவராக யோகி பாபு இருந்து வருகிறார்.

யோகி பாபுவுக்கு முன்பு காமெடி நடிகர்களாக நடித்த பலரும் இப்பொழுது கதாநாயகனாக நடிக்க துவங்கி விட்டதால் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு அதிகம் வறட்சி ஏற்பட்டு இருக்கிறது.

நடிகர் யோகி பாபுவும் கூட அவ்வப்போது கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்றாலும் கூட அவர் அடிக்கடி காமெடி நடிகராகவும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் அவர்களுக்கான கேரவனை அவர்களே வாங்கி வைத்துக் கொள்கின்றனர். ஆனால் அதற்கான வாடகையை மட்டும் தயாரிப்பாளரிடம் வசூலித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

yogibabu

இதே மாதிரி யோகிபாபுவும் அவருக்கான கேரவனை அவரே வாங்கி இருக்கிறாராம். ஆனால் அந்த கேரவனுக்கான வாடகை செலவு ஒரு நாளைக்கு 40,000 ரூபாய். இந்த 40 ஆயிரம் ரூபாயை அவரது மனைவி கணக்கிற்கு அனுப்பினால் தான் அவர் மறுநாள் நடிப்பதற்கே வருவாராம் இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

மோகன்லால் பட இயக்குனருடன் கூட்டு சேரும் கார்த்தி.. செலக்‌ஷன் எல்லாம் பக்காவா இருக்கே..!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருக்கிறது.

இதனாலேயே அவருக்கு தொடர்ந்து எல்லா படமும் வெற்றி படங்களாகவே அமைந்து வருகின்றன. வெறும் சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் என்று மட்டுமில்லாமல் கலைக்களங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி.

அந்த வகையில் அடுத்து அவர் மலையாள இயக்குனரான தருண் மூர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் தருண் மூர்த்தி ஏற்கனவே தொடரும் என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கினார்.

மோகன்லால் நடித்த இந்த திரைப்படத்திற்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அவரது இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக அது ஒரு சிறப்பான திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் தொழில் இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம்.. இதுதான் கதை..!

தொடர்ந்து புதிய இயக்குனர்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

அந்த வகையில் தற்சமயம் போர்த்தொழில் திரைப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

போர் தொழில் திரைப்படம் மூலமாக விக்னேஷ் ராஜாவிற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அடுத்து அவர் இயக்கும் திரைப்படம் சமூக அரசியலை பேசும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக இந்த தனுஷ் திரைப்படமானது ராமநாதபுரம் பகுதியில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சாதிய அடக்குமுறை அதிகமாக உள்ள காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை அமைப்பை இந்த படம் கொண்டிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

மேலும் கலப்பு திருமணத்தை முக்கிய கதைகளமாக கொண்டுதான் இந்த படத்தின் கதை நகர இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. எனவே மக்கள் மத்தியில் கவனம் பெரும் ஒரு படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளையராஜாவுக்கு பிறகு அதே பெருமையை பெற்ற அனிரூத்..!

தற்சமயம் தென்னிந்திய சினிமாவில் அதிக மதிப்பு பெற்ற ஒரு இசையமைப்பாளராக இருந்து இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். அனிருத் இசையமைக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு சில பாடல்களாவது வெற்றி பாடல்களாக அமைந்திருந்தன.

இந்த நிலையில் நிறைய மற்ற மொழி நடிகர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்களுக்கு அனிரூத் இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அனிரூத் மீது அதிகம் மரியாதை வைத்த ஒரு நடிகராக விஜய் தேவரகொண்டா இருந்து வருகிறார். முன்பே அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது தமிழில் உள்ள பெரும் இயக்குனர்களை ஒரு பக்கம் வைத்து மறுபக்கம் அனிருத்தை வைத்தால் நான் அனிரூத்தைதான் தேர்ந்தெடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த அளவிற்கு அனிரூத்திற்கு விஜய் தேவரகொண்டா ரசிகராக  இருந்து வந்தார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

தற்சமயம் அந்த படத்தின் பேனர்கள் வைக்கும் பொழுது அனிருத்க்கும் மிக உயரமான பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதற்கு முன்பு இசையமைப்பாளருக்கு பெரிய பேனர் வைத்த நிகழ்வு இளையராஜாவிற்கு மட்டும்தான் நடந்திருந்தது. இப்பொழுது அதே கௌரவத்தை பெற்ற இசையமைப்பாளராக அனிருத் மாறி இருக்கிறார்.

 

 

பாட்டு பாட டி.ஆர் கேட்ட தொகை.. கொடுக்க மறுத்த கூலி படக்குழு.. இதுதான் விஷயமா.?

எப்போதுமே தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் டி ராஜேந்திரன்.

டி ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காலகட்டங்களில் நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதற்கு பிறகு அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது ஏதாவது ஒரு திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் வந்தால் கூட அவருக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் அளவிற்கு முக்கியமான நடிகராக இருந்து வருகிறார் டி ஆர்.

t rajendar

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் ஒரு பாடலை டி.ஆர் பாடி இருக்கிறார். சிக்கிட்டு என்கிற அந்த பாடல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் அந்த பாடலின் இசை வெளியீட்டு விழாவில் டி.ஆர் வந்து பாடினால் அது படத்திற்கு நல்ல பிரமோஷனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனவே இது குறித்து டி.ஆரிடம் பேசி இருக்கின்றனர். ஆனால் டி.ஆர் அதற்கு 5 லட்சம் ரூபாய் கேட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதனை அடுத்து தயாரிப்பு நிறுவனம் டி.ஆரை அழைப்பது குறித்து இப்பொழுது சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

தியாகராஜ பாகவதர் கதைதான்… துல்கர் கலம் இறங்கிய படத்தின் கதை..!

நடிகர் துல்கர் சல்மான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே வித்தியாசமான கதைகளாக இருக்கின்றன. அந்த வகையில் அவர் அடுத்து நடித்து வரும் திரைப்படம் நான் காந்தா.

இந்த காந்தா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் காந்தா திரைப்படம் ஒரு பழைய காலத்து சினிமா திரைப்படமாக இருக்கிறது.

படத்தின் கதைப்படி துல்கர் சல்மான் ஒரு கதாநாயகனாக நடிக்கும் நடிகராக இருக்கிறார். அதிக புகழ்பெற்ற நடிகராக இருக்கும் அவர் செய்யும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதைகளம் செல்கிறது.

ஆரம்பத்தில் இந்த படம் எம்.ஜி.ஆரின் கதையாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. ஏனெனில் சமுத்திரகனியின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட கலைஞர் கருணாநிதியின் கதாபாத்திரம் போலவே இருந்தது. ஆனால் இப்பொழுது வந்த தகவலின் படி இந்த திரைப்படம் தியாகராஜ பாகவதரின் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்திற்கு முன்பே தமிழ் சினிமாவில் அதிக புகழ் பெற்ற நடிகர்களாக இருந்தவர்கள் தியாகராஜ பாகவதரும் என் எஸ் கிருஷ்ணனும்தான். அவர்களுக்கு பிறகு தான் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகியோர் வந்தனர்.

எனவே இந்த கதைகளமானது அவர்களது காலகட்டத்தை கூறும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்திற்கு முன்பு இருந்த சினிமாவை இதுவரை யாரும் படம் எடுத்ததில்லை அந்த வகையில் இந்த திரைப்படம் தான் முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.