News
சூப்பர் ஸ்டாராவே இருந்தாலும் நடிக்க மாட்டோம்.. மறுத்த பிரபலங்கள்!. இதுதான் காரணம்!.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இவரின் பெயர் தான். இவருக்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
70 வயதை கடந்தும் ரஜினி தற்போது வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார்.
தற்போது ரஜினியின் படத்தில் நடிக்க மறுத்த பிரபலங்களை பற்றிய விவரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த்
எதிர்மறையான கதாபாத்திரத்தில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த். தற்பொழுது உலகெங்கும் பல கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட நடிகராக உள்ளார்.
இவரின் படத்தில் நடிக்க பல நடிகர்களும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில் தற்போது இவருடன் நடிக்க மறுத்த பிரபலங்களின் பெயர்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ரஜினி என்றாலே ஸ்டைல் தான். மேலும் எளிமையான மனிதரும் கூட. சில விழா மேடைகளில் பேசும் ரஜினிகாந்த், தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்வது வழக்கமான ஒன்று. அவ்வாறு அவர் சினிமாவில் பட்ட கஷ்டங்கள் சாதித்த சாதனை போன்றவற்றை கூறும் போது அதனைக் கேட்கும் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் அவர் மீது மிகுந்த மரியாதையை ஏற்படும்.

தற்போது வரை அவரின் படங்கள் பற்றிய அப்டேட் கிடைத்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் இவரின் படங்கள் வெளியானால் தியேட்டர்களில் தீபாவளி தான்.
தற்போது ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் லைக்காவின் தயாரிப்பில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜெய் பீம் என்ற படத்தின் மூலம் கோலிவுட் வட்டாரங்களை திரும்பி பார்க்க வைத்த ஞானவேல், தற்போது ரஜினியை வைத்து எடுக்கும் படத்தை குறித்த எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.
வேட்டையன் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், இது ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துள்ளது. பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகின.
சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த பிரபலங்கள்
வேட்டையன் திரைப்படம் முழுமையாக முடிவடைந்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் கூலி படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரன்வீர் சிங் ஆகியோரை கேட்டுள்ளனர். ஆனால் நாங்கள் வில்லனாக நடிக்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்து இருந்திருக்கிறார்கள். மேலும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் போது எவ்வாறு வில்லனாக நடிக்க முடியும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை வில்லனாக நடிப்பதற்கு கேட்டுள்ளனர். அவரும் வில்லனாக நடிப்பதற்கு மறுத்துவிட்டாராம். மேலும் இந்த படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாகவும், ஆனால் அவர் வில்லனாக நடிப்பாரா என்று தற்போது வரை தெரியவில்லை என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
