News
குக் வித் கோமாளிக்கு எதிராக சன் டிவி செய்த சம்பவம்!.. வெங்கடேஷ் பட் அந்த பக்கம் போயிட்டாரா!.. இதுதான் காரணமாம்!.
விஜய் டிவியில் வெகு காலங்களாக சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருபவர் வெங்கடேஷ் பட். வெகு காலங்களாக இருந்தாலும் அவருக்கு பிரபலமான நிகழ்ச்சியாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.
பொதுவாக நடுவர்கள் என்றாலே எப்போதும் டெரராகதான் இருப்பார்கள். ஆனால் அந்த விதிமுறையை மாற்றி ஒரு ஜாலியான நடுவராக வலம் வந்துக்கொண்டிருந்தார் செஃப் வெங்கடேஷ் பட். இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி முதல் குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் துவங்கியது.,
ஆனால் அதில் வெங்கடேஷ் பட் கலந்துக்கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கியுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜும் தமிழ்நாட்டில் பிரபலமான செஃப் ஆவார். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் சன் டிவி பக்கம் சாய்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போலவே சன் டிவியில் டாப் குக் டூப் குக் என்று ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்தான் நடுவராக இருக்க போவதாக கூறப்படுகிறது. இதில் கே.பி.ஒய் தீனா, சூப்பர் சிங்கர் பரத், ஜிபி முத்து, தீபா போன்றோர் கலந்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட்டின் விபி டான்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. எனவேதான் விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவிக்கு மாறியிருக்கிறார் வெங்கடேஷ் பட் என கூறப்படுகிறது.
