விரைவில் வெளிவருகிறது சீயான் 61 டீசர் –  படம் பேரு என்ன?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் முக்கியமான நடிகராக பார்க்கப்படுபவர் சீயான் விக்ரம். இவர் ஒரு படத்தில் நடித்தாலே, அதில் இவருக்கு வித்தியாசமான கெட்டப் எதாவது இருக்குமா? என மக்கள் எதிர்ப்பார்ப்பதுண்டு.

Social Media Bar

அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் தற்சமயம் கோப்ரா திரைப்படத்தில் பல கெட்டப்களில் நடித்திருந்தார்.

இதற்கு பிறகு விக்ரம் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார்.

தமிழில் காலா, கபாலி, மெட்ராஸ் போன்ற வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். எனவே இந்த படமும் விக்ரமிற்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

விரைவில் இந்த படத்தில் டைட்டில் டீசர் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.