ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதேபோல அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் உடனடிக்கும் சக நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர் என அனைவரும் முக்கியம்.
அந்த வகையில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களை பற்றி எல்லாம் நாம் அடிக்கடி பேசி வருவதுண்டு. ஆனால் ஒளிப்பதிவாளர் பற்றி பேசுவது என்பது குறைவு தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒல்லி பதிவாளராக இருப்பவர் எஸ் கோபிநாத்.
இவர் தற்பொழுது முன்னணி நடிகராக இருக்கும் விஜயை முதன்முதலாக சந்தித்தது குறித்தும் அப்பொழுது நடந்த சம்பவம் பற்றியும் கூறியிருக்கிறார் அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தில் படம்
கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் விக்ரமனின் நடிப்பில் வெளிவந்த அதிரடி திரைப்படம் இதில் இந்த படத்தை தரணி இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் எஸ் கோபிநாத்.

மேலும் இந்த படத்தில் லைலா விவேக் நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மேலும் இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ஆன எஸ்கோபிநாத் இந்த படத்தின் போது நடந்த சம்பவம் ஒன்றே பிரபல சேனல் ஒன்றில் நடந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
விஜய்க்கு படத்தை காட்ட மறுத்த ஒளிப்பதிவாளர்
தில் படத்தின் காப்பி ரெடியாக இருந்தபோது இயக்குனர் இன்னும் படத்தை பார்க்கவில்லை ஆனால் விஜய் பார்க்க ஆசைப்படுவதாக தயாரிப்பாளர் என்னிடம் போன் செய்து சொன்னார். நான் டைரக்டர் பார்க்காமல் வேறு யாருக்கும் படத்தை காண்பிக்க மாட்டேன் என கூறிவிட்டேன். அது யாராக இருந்தாலும் பரவாயில்லை என நான் நினைத்தேன்.

அதன் பிறகு ப்ரொடியூசர் இயக்குனருக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார். பிறகு இயக்குனர் என்னிடம் பேசினார். தயவுசெய்து விஜய்க்கு படத்தை போட்டு காட்டு நிலைமை புரியாமல் பண்ணாதே என கூறினார்.
அதன் பிறகு தான் நான் விஜய்க்கு படத்தை காண்பித்தேன். நானும் விஜயும் தில் படத்தின் முதல் காப்பி ஒன்றாக பார்த்தோம். இவ்வாறாக தான் எங்கள் இருவரின் சந்திப்பு இருந்ததாக என ஒளிப்பதிவாளர் கோபிநாத் கூறியிருக்கிறார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






