இந்த தடவ தப்பாது.. கோப்ரா ரிலீஸ் எப்போது..? – முக்கிய அப்டேட்!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

2019 வாக்கிலேயே தொடங்கப்பட்ட இந்த படம் இடையே கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தாமதமாகி வந்தது. பின்னர் ஒருவழியாக படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டிருந்த நிலையில் படம் அடுத்த மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் படத்தயாரிப்பு பணிகள் முழுவதும் முடியாததால் மீண்டும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே கோப்ரா படத்தின் “அதீரா” பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனாலும் படத்தை ஆகஸ்டில் வெளியிடலாம் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டதாக தெரிகிறது.
ஆனால் தொடர்ந்து காலதாமதம் செய்ய வேண்டாம் என சீக்கிரத்திலேயே படத்தை வெளியிட விக்ரம் உள்ளிட்ட பலரும் விரும்புவதாகவும் தெரிகிறது. படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில் புதிய அறிவிப்பை கோப்ரா படத்தை தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது.
அதன்படி கோப்ரா படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான விக்ரமின் மகான் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகி நீண்ட காலம் ஆவதால் படம் குறித்து ரசிகர்களிடையே நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது.