Connect with us

65 வருட சினிமா வாழ்க்கையில் கமல் கொடுத்த காமெடி ஹிட் மூவிஸ்!..

kamal moviesj

Special Articles

65 வருட சினிமா வாழ்க்கையில் கமல் கொடுத்த காமெடி ஹிட் மூவிஸ்!..

உலக நாயகன் என்று தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசன் நடிப்பு மட்டுமல்லாமல் பன்முகங்களைக் கொண்டவராக தமிழ் சினிமாவில் விளங்கி வருகிறார்.

திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், நடன கலைஞர் என பன்முகங்களைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் ஆற்றிய பங்கு ஏராளம்.

வித்யாசமான கதைகளை தேர்வு செய்து அதில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு சினிமாவின் மற்றும் ஒரு பக்கத்தை காண்பித்தவர் நடிகர் கமல்.

இந்நிலையில் சமீபத்தில் சினிமாவில் தன்னுடைய 65 வருடத்தை முழுமை செய்திருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவரின் 65 வருட சினிமாவில் பல காமெடி ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அந்த பட்டியலை பற்றி தற்பொழுது காணலாம்.

அவ்வை சண்முகி 1996

Avvai-Shanmugi

இந்தத் திரைப்படம் 1996 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இந்த படத்தில் நாகேஷ், ஜெமினி கணேசன் மீனா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். திரைப்படத்துறையில் நடன இயக்குனராக வேலை பார்க்கும் கதாநாயகனாக பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் கமல் நடிக்கிறார். அவரின் மனைவியாக ஜானகி எனும் கதாபாத்திரத்தில் மீனா நடிக்கிறார்.

இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து பெறுகிறார்கள். நீதிமன்ற உத்தரவின்படி பாண்டியனின் மகளை வாரம் வெள்ளிக்கிழமை ஒருமுறை மட்டும் பார்க்கலாம் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதன்படி அவனின் மகளை காணச் செல்லும்போது மகளுக்கு தன் தந்தையுடன் இருக்க விருப்பம் தெரிவிக்கிறாள்.

ஆனால் ஜானகி தன்னுடைய மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். அதன் பிறகு சில நாட்கள் கழித்து ஒரு நாளிதழில் விஸ்வநாதன் ஐயர், தனது பேத்தியை கவனித்துக் கொள்ளக்கூடிய ஒரு வேலைக்காரியை தேடிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி கிடைக்கிறது.

இதனால் மீனாவின் வீட்டிற்குள் வேலைக்காரியாகச் சென்று அவரின் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இறுதியாக ஜானகியும், பாண்டியனும் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் படத்தின் கதையாக அமைந்திருக்கிறது.

காதலா காதலா 1998

kadhala kadhala

எம் எஸ் விஸ்வநாதன், கமல்ஹாசன், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா ஆகியோர் நடித்த நகைச்சுவை திரைப்படம் காதலா காதலா. இந்தப் படத்தில் ராமலிங்கமாக கமல்ஹாசன், சுந்தரலிங்கமாக பிரபுதேவா நடிக்கிறார்கள். ராமலிங்கமும் சுந்தரலிங்கமும் எப்போதும் முயற்சி செய்யாமல் எளிய வழியில் பணம் சம்பாதிப்பதை வழக்கமாகக் கொண்டு அதைத்தான் முயற்சி செய்து வருவார்கள்.

இந்நிலையில் ராமலிங்கத்தை சுந்தரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த சௌந்தர்யா காதலிக்கிறார். சுந்தரலிங்கத்தை ஜானகி கதாபாத்திரத்தில் நடித்த ரம்பா காதலிக்கிறார். மேலும் ராமலிங்கமும் சுந்தரலிங்கமும் ஏழைகள் என்பதால் இவர்களின் காதலை அவர்கள் பெற்றோர்கள் சம்மதிக்க வேண்டும் என்பதற்காக காதலிகளின் குடும்பங்களை கவர எடுக்கும் முயற்சிகள் நகைச்சுவையாக அமைந்திருக்கும் திரைப்படம் தான் காதலா காதலா திரைப்படம்.

மைக்கேல் மதன காமராஜன் 1990

machel mathana kamarajan

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், ஊர்வசி, குஷ்பூ, நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் மைக்கேல், மதனகோபால், காமேஸ்வரன், சுப்பிரமணியராஜ் வேடத்தில் கமலஹாசன் நடிக்கிறார். தொழிலதிபராக இருக்கும் வேணுகோபால் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறக்கிறது. அந்த நான்கு குழந்தைகள் தான் மைக்கேல், சுப்பிரமணியராஜ், காமேஸ்வரன், மதனகோபால். இதில் கயவர்களால் நான்கு குழந்தைகளும் தனித்தனியே ஒவ்வொரு இடங்களில் வளர்கிறது. இதில் மதனகோபால் மட்டும் தன் தந்தையுடன் வளர்ப்பு மகனாக வளர்கிறார். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு நடக்கும் விஷயங்கள் நகைச்சுவையாக படத்தின் கதை அமைந்திருக்கிறது.

பஞ்சதந்திரம் 2002

panja thanthiram

பஞ்சதந்திரம் கே ஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். இந்த படத்தில் நடிகர் கமல் ராம் என்ற கதாபாத்திரத்திலும், சிம்ரன் மைதிலி என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ராமிற்கு ஐயப்பன் நாயர், வேதாந்தம் ஐயர், வேதம், கணேஷ் ஹெட் டே மற்றும் ஹனுமத் ரெட்டி என்ற நண்பர்கள் உள்ளார்கள்.

பிளே பாயாக இருந்த கமல் திருமணத்திற்கு பிறகு மைதிலிக்கு விசுவாசமாக இருக்கிறார் ஒருமுறை ஹெக்டேவின் முன்னாள் காதலி நிர்மலா தற்கொலை செய்வதாக கூறுகிறான். அதை காப்பாற்ற கமல் சென்ற இடத்தில் மைதிலி இருவரையும் தவறாக நினைத்து ராமை விட்டு மைதிலி பிரிகிறாள். அந்த சோகத்தில் இருந்த ராமை சமாதானப்படுத்துவதற்கு அவரது நண்பர்கள் பெங்களூருக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

அங்கு அவர்களின் நண்பர்களுடன் ஏற்பாட்டில் ராமின் அறையில் மேகி என்னும் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் தோன்றுகிறாள். ஆனால் மைதிலிக்கு துரோகம் செய்யக்கூடாது என கமல் நினைக்க மேகியுடன் சண்டை போட்டு வந்து விடுகிறார்.

உள்ளே சென்று மேகி பார்த்ததும் அவரது நண்பர்கள் அவள் இறந்துவிட்டால் எனக் கூறி அவளின் உடலை அப்புறப்படுத்துகிறார்கள் பிறகு ஒரு பாலத்தின் அடியில் கொண்டு போட்டுவிட்டு அங்கிருந்து செல்கிறார்கள்.

அதன் பிறகு ஒரு நிகழ்ச்சியில் மேகி உயிருடன் வருகிறாள். மேகி அங்கு வந்து நான் இறந்து விட்டதாக உங்களை ஏமாற்றினேன். என்னுடைய வைரம் எங்கே என்று கேட்கிறார். அதன் பிறகு அந்த வைரம் யாருடையது. ஏன் மேகி நாடகம் ஆடினால். மைதிலி உடன் ராம் சேர்ந்தாரா என்பது தான் படத்தின் கதையாக இருக்கும்

வசூல்ராஜா எம்பிபிஎஸ் 2004

mbbs

கமல், பிரபு, சினேகா, பிரகாஷ்ராஜ், நாகேஷ், மாளவிகா, கிரேசி மோகன் மற்றும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வசூல்ராஜா எம்பிபிஎஸ். இந்த படத்தில் வசூல் ராஜாவாக கமல் நடிக்கிறார். . வசூல் ராஜாவாக மக்களிடம் பணம் வசூலித்து தன்னுடைய நண்பர்களுடன் வாழ்க்கையை நடத்துகிறார் ராஜா.

ஆனால் ராஜாவின் தந்தைக்கு தன் மகன் டாக்டராக வேண்டும் என ஆசை உண்டு. அதனால் தன் தந்தையின் அசைக்காக போலி வெங்கடராமன் தொண்டு மருத்துவமனையை உருவாக்கி அவரின் ஆசைக்கு ஏற்ப நடித்து வருகிறார்.

இதில் விஸ்வநாதன் ஆக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். அவரின் மகள் ஜானகிக்கு ராஜாவை திருமணம் செய்ய அவரின் தந்தை ஏற்பாடு செய்யப்படும் போது விஸ்வநாதனுக்கு ராஜா டாக்டர் அல்ல என தெரியவந்து, அதை அவரின் பெற்றோருக்கு தெரிவித்து அவர்களையும் அவமானப்படுத்திவிட்டு வெளியே அனுப்புகிறா. இந்த அவமானங்களை சரி செய்ய ராஜா எம்பிபிஎஸ் படிப்பதற்காக மருத்துவக் கல்லூரி செல்கிறார்.

அங்கு நடக்கும் நகைச்சுவையான விஷயங்கள் மற்றும் இறுதியில் ஜானகியை திருமணம் செய்து கொண்டாரா என்பதுதான் படத்தின் கதையாக அமைந்திருக்கும்.

தெனாலி 2000

thenali moivie

இந்த படத்தில் கமல்ஹாசன், ஜெயராம், ஜோதிகா, தேவயானி ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் தெனாலியாக கமல் நடிக்கிறார். ஆனால் கமல் இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக மனநல சிகிச்சைக்காக சென்னை வந்திருப்பார். மேலும் தெனாலி கைலாஷ் என்னும் மருத்துவரின் சிகிச்சைக்காக காத்திருக்கும் போது அவர் குடும்பத்துடன் விடுமுறைக்கு கொடைக்கானல் செல்கிறார் அதனால் விடுமுறைக்குப் பிறகு தான் சிகிச்சை அளிப்பதாக கூறிவிட்டு காத்திருக்கச் சொல்கிறார்.

ஆனால் பஞ்சபூதம் என்ன மருத்துவர் கொடைக்கானலுக்குச் சென்று அவரின் வீட்டிலிருந்து நீ சிகிச்சை பெற்றுக் கொள் என தெனாலியை அங்கு அனுப்பி வைக்கிறார். தெனாலி அங்கு செல்லும்போது கைலாஷூன் தங்கை ஜானகி என்பவரை காதலிக்கிறார்.

படம் முழுக்க தெனாலின் செயல்களால் கைலாஷ் பல சங்கடங்களுக்கு ஆளாகிறார். இறுதியாக தெனாலியை வெடி குண்டுடன் ஒரு மரத்தில் கட்டி தெனாலியை கொல்ல முயற்சிக்கிறார். ஆனால் தெனாலி அவரது அச்சத்தில் இருந்து விடுபட மட்டுமே இந்த குண்டு பயன்படுத்தப்பட்ட போலி வெடி குண்டு என நினைத்து அதை பிடுங்கி கைலாசின் வீட்டில் எறிகிறார்.

இறுதியாக கைலாசிற்கு பக்கவாதம் வருகிறது. தெனாலி ஜானகியை திருமணம் செய்து கொள்கிறார். தெனாலி மற்றும் கைலாஷ் குடும்பத்தினர் சுற்றுலாவிற்கு செல்லும்போது, தெனாலி நீண்டகாலமாக இழந்த தன்னுடைய மனைவியை அங்கு சந்தித்து மீண்டும் அவருடன் இணைகிறான். இதை பார்த்த கைலாஷ் தன்னுடைய நாற்காலி சக்கரத்திலிருந்து எழுந்து என் தங்கைக்கு துரோகம் இழைத்து விட்டதாக கூறி அடிக்கச் செல்கிறார். ஆனால் இது எல்லாமே கைலாசை அந்த நோயிலிருந்து குணப்படுத்துவதற்காக தெனாலி போட்ட நாடகம் என்பதை உணர்கிறார்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top