Tamil Cinema News
வளர்த்து விட்டவங்களை மறந்த ராஷ்மிகா. கடுப்பான காங்கிரஸ் எம்.எல்.ஏ..!
தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் வட இந்தியாவில் ஹிந்தி என நான்கு மொழியிலும் பிரபல நடிகையாக அறியப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ராஷ்மிகா மந்தனா ஆரம்பத்தில் கன்னட சினிமாவில்தான் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆனால் அதற்கு பிறகு அவருக்கு கன்னடத்தை விடவும் தெலுங்கு சினிமாவில்தான் அதிக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தெலுங்கில் பிரபலமடைந்து வந்த ராஷ்மிகா மந்தனா சுல்தான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிலும் கூட கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த நிலையில் ராஷ்மிகா அதிக பிரபலமடைந்த பிறகு அவருக்கு ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தது. ஹிந்தியில் அவர் நடித்த அனிமல் திரைப்படம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அடுத்ததாக ராஷ்மிகா தொடர்ந்து பாலிவுட்டில் வரவேற்பை பெற்று வருகிறார்.
இதனை தொடர்ந்து ராஷ்மிகா தன்னை அறிமுகப்படுத்திய கன்னட சினிமாவை மதிப்பதே இல்லை. தொடர்ந்து தெலுங்கு சினிமாவுக்கே ஆதரவாக இருக்கிறார் என ஒரு குற்றச்சாட்டு உண்டு. சமீபத்தில் பெங்களூருவில் சர்வதேச திரைப்பட விழா நடந்தது.
இதில் கலந்துக்கொள்ள பல கன்னட நடிகர் நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நடிகை ராஷ்மிகாவுக்கும் கூட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் விழாவிற்கு வரவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவி கனிகா பேசியுள்ளார்.
அவர் கூறும்போது ஏற்கனவே ராஷ்மிகா எனது வீடு கர்நாடகாவில் இல்லை ஹைதராபாத்தில் உள்ளது எனதான் பேசியிருந்தார். போன வருடமே நாங்கள் ராஷ்மிகாவை அழைத்திருந்தோம். ஆனால் அவர் வரவில்லை. கன்னட நடிகையாக இருந்து தமிழில் பிரபலமடைந்த பிரியங்கா மோகனே இந்த விழாவிற்கு வருகை தந்துள்ளார்.
ஆனால் ராஷ்மிகா வர மறுத்துள்ளார். என ராஷ்மிகா குறித்து பேசியுள்ளார் ரவி கனிகா.
