Latest News
அஜித்தையே கலாய்க்குறீங்களா!.. திமுகவிற்கு எதிராக ரசிகர்கள் செய்த வேலை…
பொதுவாக எப்போதும் சினிமா வட்டாரத்தில் நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது இருந்துள்ளது. எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் துவங்கி போட்டி நடிகர்களின் ரசிகர்கள் சண்டையிட்டுக்கொள்வது என்பது தமிழ் சினிமாவில் வழக்கமாக இருந்து வரும் விஷயமாகவே உள்ளது.
தற்சமயம் விஜய் மற்றும் அஜித் இருவரும் முக்கியமான போட்டி நடிகர்களாக உள்ளனர். ஆனால் சம்பந்தம் இல்லாமல் கட்சி காரர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் இடையே ஒரு சண்டை இன்று கிளம்பியுள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தி.மு.கவை சேர்ந்த துரைமுருகன் கொடுத்த பேட்டியே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
துரைமுருகனிடம் பேட்டி கேட்ட பத்திரிக்கையாளர்கள் விஜய் அஜித் பற்றி கேட்கும்போது அதற்கு துரைமுருகன் அஜித்தா அது யாரு? என கேட்டுவிட்டார். வெகு காலங்களாக அஜித் எந்த ஒரு விழாவிலும் கலந்துக்கொள்வதில்லை. இதனை குறிப்பிடும் வகையிலேயே துரைமுருகன் அப்படி கேட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் இதனால் தல ரசிகர்கள் பெரும் கோபத்திற்கு உள்ளாகி உள்ளனர். தற்சமயம் இதற்கு எதிரான ஐயோ அம்மா கொல்றாங்க என்னும் ஹேஸ் டேக்கை பிரபலப்படுத்தி வருகின்றனர் தல ரசிகர்கள். தற்சமயம் இதுதான் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.