News
TVK Flag : அண்ணா, எம்.ஜி.ஆருக்கு நிகரான ஆள்!.. ஒரே வரியில் சர்ச்சையை கிளப்பிய தளபதி விஜய்!..
தற்போது விஜய் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி அந்த கட்சியின் கொடி மற்றும் கட்சியின் பாடலை வெளியிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் அவரின் கட்சி கொடி பற்றிய விவரங்களையும், அந்த பாடலையும் மக்கள் இணையத்தில் தேட தொடங்கியுள்ளனர். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் பாடல் வெளிவந்து ரசிகர்களின் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
தற்போது இந்த பாடலில் இடம்பெற்றுள்ள மூன்றெழுத்து மந்திரம் என்னும் சொல் விஜய்க்கு சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பாடல்
விஜய் பனையூரில் தன்னுடைய கட்சியின் அலுவலகத்தில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து பாடலையும் அறிமுகம் செய்திருக்கிறார்.
இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் 300 நிர்வாகிகள் மற்றும் விஜயின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பெற்றோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய விஜய் தன்னுடைய கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த பிறகு பேசினார்.

மேலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பாடலையும் அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்தப் பாடல் தமிழர்களின் பண்பாட்டையும், மரபையும், மேலும் தற்போது நடக்கும் அரசியல் நிலவரத்தையும், அதற்காக விஜய் களம் இறங்கப் போவதையும் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றெழுத்து மந்திரம்
இந்நிலையில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் வெளியிட்ட பாடல் ஒன்றில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் “மூன்றெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது” என்ற வரிகள் இடம்பெற்றள்ளன.
இதில் மூன்றெழுத்து என்பது அரசியலில் பிரபலமாக இருந்த அண்ணா அதன் பிறகு அவர் வழியில் வந்த எம்ஜிஆர் இவர்கள் இருவரும் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றியவர்கள் மற்றும் தமிழக மக்களின் மனதில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

இந்நிலையில்தான் கட்சி ஆரம்பித்த உடனே அவர்களுடன் விஜய் தன்னை ஒப்பிட்டு கூறும் அளவிற்கு விஜய் வளர்ந்து விட்டாரா என பலரும் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் இந்த பாடல்களை பார்த்து விஜய்க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பலர் இந்த பாடலை ஷேர் செய்து தற்போது ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த கட்சிக்கொடி மற்றும் பாடலை பற்றி விஜய் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் நாளில் தான் நிச்சயம் பேசுவேன் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
