News
சோபிதா நாக சைதன்யா திருமணம் நடக்காது.. இது என்ன புது பிரச்சனை
சமீப காலங்களாக சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் ஜோடி நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஜோடி. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இருவரின் நிச்சயதார்த்தம் நடைபெற்று புகைப்படங்கள் வெளிவந்த நிலையில் இவர்களைப் பற்றிய சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் சுற்றிக்கொண்டு இருக்கிறது.
நிச்சயதார்த்தம் நடைபெற்று சில நாட்கள் ஆனாலும் இவர்களைப் பற்றிய சர்ச்சை இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் சோபிதாவும், நாக சைதன்யாவும் பிரிந்து விடுவார்கள் என ஒருவர் கூறியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாக சைதன்யா சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்
நாக சைதன்யா முன்னதாக நடிகை சமந்தாவை 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்கள்.

அதன் பிறகு நாக சைதன்யா சோபிதா உடன் டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் காதலித்து தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. இவர்களின் புகைப்படங்களை நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா அவரின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, அது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், சினிமா வட்டாரங்களையும் திரும்பி பார்க்க வைத்தது.
இந்நிலையில் பலரும் சமந்தாவுக்கு ஆதரவாகவும், நாக சைதன்யாவுக்கு எதிராகவும் பல கருத்துகளைப் பேசி வந்தார்கள். தற்போது ஒரு ஜோதிடர் ஒருவர் நாக சைதன்யா மற்றும் துலிபாபா பற்றி கூறியிருக்கும் கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா பிரிந்து விடுவார்கள்
சமீபத்தில் பிரபல ஜோசியர் ஒருவர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா வரும் 2027 ஆம் ஆண்டில் பிரிந்து விடுவார்கள். அதன் பிறகு நாக சைதன்யாவிற்கு மற்றொரு பெண் மேல் காதல் ஏற்படும் என தெரிவித்திருந்தார். இந்த விஷயம் இணையத்தில் பேசுபொருளானது.
இதைப் பற்றி பேசிய பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சுபைர் பிரபலங்கள் மீது விமர்சனம் வைத்தால் தன்னை அனைவரும் திரும்பி பார்ப்பார்கள், என்று பலரும் பேசி வருகிறார்கள். இது வழக்கமான ஒன்று தான். ஆனால் பல ஜோதிடர்கள் சொல்வதெல்லாம் நடந்திருக்கிறதா என்ன என அவர் கேட்டுள்ளார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஆகுவார் என்றும், சென்னையில் வெள்ளம் வந்த பொழுது இந்த வருடம் நல்ல வருடமாக அமையும் என பல ஜோசியர்கள் கூறினார்கள். அதெல்லாம் நடந்ததா என்ன அது போல தான் இந்த விஷயமும் என கூறியிருக்கிறார்.
