News
சிறு வயதிலேயே பிரபுதேவாவிடம் அதை பண்ணுனேன்!.. விமர்சனத்துக்கு உள்ளான நடிகை..
ஒரு சில நடிகைகள் தமிழ் சினிமாவில் குறைந்த அளவு படங்கள் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் குறைய அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்திருப்பார்கள்.
அந்த வகையில் 90ஸ் காலகட்டத்தில் ஒரு படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவிற்கு பிரபலம் அடைந்தவர் நடிகை காயத்ரி ரகுராம்.
அதன் பிறகு அவர் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. மேலும் நடன இயக்குனரான அவர், அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்றினார். இந்நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில் காயத்ரி ரகுராம், பிரபுதேவா உடன் நடிக்கும் பொழுது ஏற்பட்ட ஒரு சுவாரசியமான சம்பவத்தை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை காயத்ரி ரகுராம்
இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலும் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். அவர் முதலில் நடித்த படம் ரெபல்லேலோ ராதா. இதில் புதுமுகம் திலீப்புடன் இணைந்து நடித்திருந்தார்.
அதன் பிறகு கடந்த 2002 ஆம் ஆண்டு நகைச்சுவை படமான சார்லி சாப்ளின் என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் அந்த படத்தில் பிரபு மற்றும் அபிராமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு அனைவரும் அறிந்த படமாக 2003 ஆம் ஆண்டு விசில் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தென்னிந்திய சினிமாவில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே நடித்திருந்தார்.

நடன இயக்குனரான காயத்ரி ரகுராம் பொய் சொல்ல போறோம், ஜெயம் கொண்டான் மதராசபட்டினம், தெய்வத்திரு மகள், ஒஸ்தி, அஞ்சான் போன்ற படலங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
அதன் பிறகு அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வை ராஜா வை என்ற படத்தில் கௌதம் கார்த்தியின் சகோதரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிறகு 2017 ஆம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இவ்வாறு சினிமாத்துறையில் பணியாற்றி வந்த காயத்ரி ரகுராம் அரசியலிலும் தனது பயணத்தை தொடங்கினார்.
விமர்சனத்துக்கு உள்ளான நடிகை காயத்ரி ரகுராம்
அவர் அளித்த பேட்டி ஒன்றில் சினிமா அனுபவங்களை பற்றி பகிர்ந்திருக்கிறார். அவர் கூறும் போது என்னுடைய அப்பாவிற்கு என்னை சிறுவயதில் இருந்தே நடிக்க வைக்க ஆசை இருந்தது. ஆனால் எனக்கு பயமாக இருந்ததால் நான் சிறுவயதில் படங்களை நடிக்க மறுத்து விட்டேன். அஞ்சலி, கேளடி கண்மணி போன்ற படத்தில் நடிக்க நான் மறுத்துவிட்டேன்.
அதன் பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது என்னால் நடிக்க முடியவில்லை.
அதன் பிறகு சார்லி சாப்ளின் பட வாய்ப்பு வந்தது நகைச்சுவை படங்கள் என்றால் எனக்கு பிடிக்கும். அதனால் நான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மேலும் பிரபுதேவா உடன் எனக்கு நடிக்கும்போது எதுவும் தோன்றவில்லை. ஏனென்றால் நான் சிறுவயதிலிருந்தே நல்ல பழகியவர்கள் தான் அந்த படத்தில் நடித்திருந்தார்கள். மேலும் நான் ஆண்மகன் போல கொஞ்சம் நடந்து கொள்வேன். பிரபு தேவா சாருக்கு தான் பெண் போல் எப்படி நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தேன். மேலும் பிரபு தேவாவை பொருத்தவரை நடிகைகளுக்கு அதிக ஸ்பேஸ் கொடுப்பவர். அவர்கள் தெரியும் படி நடனத்தை சொல்லிக் கொடுப்பார்.
அப்படிதான் அந்த படத்தில் வரும் பாடல் ஒன்றில் பிரபு தேவாவின் தோள் மீது காலை போட்டு நடனமாடி இருப்பேன். அது அப்போது பேசு பொருளானது. எனக்கு அப்போது சிறுவயதாக இருந்ததால் யார் என்ன சொன்னாலும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டேன். மேலும் அந்த படத்தின் மூலம் எனக்கு நிறைய ரசிகர்கள் மாறினார்கள். ஒரு சிலர் என்னை கடுமையாகவும் விமர்சித்தார்கள். நான் அந்த படத்தில் நடிக்க வரும் போது எனக்கு 16 வயது தான் என அவர் கூறினார்.
