Connect with us

கிளம்புனதுமே வெங்கடேஷ் பட் செய்த வேலை!.. பிரச்சனையை சந்தித்த குக் வித் கோமாளி!.. சென்சார் பண்ணி மறைச்சதுக்கு இதுதான் காரணம்!.

sun tv top cook

News

கிளம்புனதுமே வெங்கடேஷ் பட் செய்த வேலை!.. பிரச்சனையை சந்தித்த குக் வித் கோமாளி!.. சென்சார் பண்ணி மறைச்சதுக்கு இதுதான் காரணம்!.

Social Media Bar

விஜய் டிவியில் பிரபலமாக இருந்து வரும் நிகழ்ச்சியில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. குக் வித் கோமாளிக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதற்கு முக்கிய காரணமே அதன் தனித்தன்மைதான்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி போன்று இன்னொரு நிகழ்ச்சி தமிழ் டிவி சேனல்களில் இல்லாததே இதற்கு காரணமாகும். இந்த நிலையில் தற்சமயம் சன் டிவியானது குக் வித் கோமாளி போன்றே ஒரு நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு டாப் குக் டூப் குக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெங்கடேஷ் பட்தான் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கிறார் என கூறப்படுகிறது. இதில் விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சேர்ந்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலுவும் முக்கிய விருந்தாளியாக வரவிருக்கிறார்.

top cook dub cook
top cook dub cook

இந்த நிலையில் வடிவேலு வருகிறார் என தெரிந்ததுமே குக் வித் கோமாளிக்கு ஸ்பான்சர் செய்து வந்த நிறுவனங்கள் பலவும் தற்சமயம் சன் டிவி நிகழ்ச்சி பக்கம் தாவியுள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இதில் வெங்கடேஷ் பட்டின் பங்கும் அதிகம் என கூறப்படுகிறது.

இதனால்தான் குக் வித் கோமாளி முதல் இரண்டு எபிசோடுகளில் நிறைய நிறுவனங்களின் பெயர்கள் மறைக்கப்பட்டிருந்தன என்றும் கூறப்படுகிறது.

To Top