Connect with us

ஒரே விலைக்கு விற்பனையான கூலி மற்றும் ஜனநாயகன்..! இதுதான் காரணமாம்.!

Tamil Cinema News

ஒரே விலைக்கு விற்பனையான கூலி மற்றும் ஜனநாயகன்..! இதுதான் காரணமாம்.!

Social Media Bar

பெரிய திரைப்படங்கள் எல்லாமே விற்பனையில் என்ன சாதனை செய்கிறது என்பது இப்பொழுது மக்களால் அதிகமாக கவனிக்கப்படுகிறது. ஒரு திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றதாக இருந்தால் ஓடிடி மற்றும் சேட்டிலைட் மாதிரியான விற்பனைகளில் அதிக விலைக்கு விற்பனையாகின்றன.

அதுவே அந்த படத்திற்கு வரவேற்பு குறைவாக இருந்தால் அதன் விற்பனை விலையும் குறைவாக தான் இருக்கிறது. அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் மாதிரியான பெரிய நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து பெரிய திரைப்படங்களின் ஓடிடி உரிமைகளை வாங்குகின்றன.

அந்த வகையில் தற்சமயம் ஜனநாயகன் மற்றும் கூலி இரண்டு திரைப்படங்களுமே பெரிய பட்ஜெட் திரைப்படங்களாக இருக்கின்றன. இவை ஓடிடி உரிமம் எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டுள்ளன என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களுமே 125 கோடிக்கு ஓ.டி.டி உரிமம் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஏன் இரண்டு திரைப்படங்களுமே ஒரே விலைக்கு விற்பனையாகி இருக்கின்றன என பார்க்கும் பொழுது இதற்கு ஓடிடி நிறுவனங்கள் சில விதிமுறைகளை வகுத்துள்ளன.

அதன்படி தமிழ் சினிமாவில் வரும் திரைப்படம் எவ்வளவு பெரிய பட்ஜெட் திரைப்படமாக இருந்தாலும் அதிகபட்சமாக அதற்காக கொடுக்கும் விலையாக 125 கோடியை நிர்ணயம் செய்திருக்கிறதாம் ஓடிடி நிறுவனங்கள். இதனால் தான் இந்த இரண்டு திரைப்படங்களும் அதிக விலைக்கு விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

To Top