Latest News
கார்ப்பரேட் வில்லன்கள் படங்களில் டாப் லிஸ்ட்டில் இருக்கும் தமிழ் படங்கள்!.
சினிமாவில் பல வித்தியாசமான கதைகள் படங்களாக எடுக்கப்பட்டு அது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். சமூகத்தில் நடக்கும் சில உண்மை சம்பவங்கள் அரசியலில் நடக்கும் சில சூழ்ச்சிகள் மக்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்றவற்றை மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் பல இயக்குனர்கள் அழகாக படம் எடுத்து வெளியிடுவார்.
இந்நிலையில் கார்ப்பரேட்களில் நடக்கும் சில சம்பவங்களை படமாக எடுத்து அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். அந்த வகையில் தமிழில் கார்ப்பரேட் நிறுவனங்களின் படங்களில் சில படங்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
கத்தி 2014
விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கத்தி. இந்தப் படத்தில் விஜய் இரு வேடத்தில் நடித்திருக்கிறார். விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயம் அழிந்து கொண்டு வரும் நிலையில், விவசாயிகளின் தற்கொலையும் அதிகரித்து வருகிறது. மேலும் தண்ணீரை பாட்டிலில் பேக் பண்ணி விற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் பணம் கொட்டுகிறது.
இது அரசின் அனுமதியோடு நடந்து வருகிறது. என்பதை விவரிக்கும் படமாக இந்த கத்தி படம் அமைகிறது. தன்னூத்து என்ற கிராமத்தில் ஜீவானந்தம் என்ற பெயரில் விஜய் வசித்து வருகிறார். அந்த கிராமத்தில் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லாத காரணத்தால் கிராமவாசிகள் நிலங்களை விற்பதற்கு முடிவு செய்கிறார்கள்.
ஆனால் பூமிக்கு அடியில் தண்ணீர் இருப்பதால் அந்த கிராமத்துக்கு தன்னூத்து என பெயர் வந்தது என்றும், எனவே தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டால் தண்ணீர் பஞ்சம் கிராமத்தில் இருக்காது என விஜய் கூறுகிறார்.
அதற்கான வேலையை விஜய் தொடங்கும் நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று அந்த நிலங்களைச் சுற்றி வேலி போடுகிறது. இதை எதிர்த்து கேள்வி கேட்ட ஜீவானந்தத்தை போலீஸ் கைது செய்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் அந்த கிராமத்தின் மீது உலகம் திரும்பி பார்க்க வேண்டும் என முடிவு செய்து ஏழு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
அதன் பிறகு இவர்களின் பிரச்சனை எவ்வாறு தீர்ந்தது ஜீவானந்தம் கைது செய்து உள்ளே இருக்கும் நிலையில், மற்றொரு விஜய்யான கதிரேசன் இந்த பிரச்சனையில் எவ்வாறு உள்ளே வந்தார் என்பதை விவரிக்கும் படமாக இந்த படம் இருக்கிறது.
சிங்கம் 3
நடிகர் சூர்யா, அனுஷ்கா செட்டி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சிங்கம் 3. போலீஸ் கமிஷனர் ஒருவரின் கொலையை யார் செய்தார் என்பதை கண்டுபிடிப்பதற்காக தமிழக அரசால் சூர்யா நியமிக்கப்படுகிறார். இந்த கொலை செய்தது யார் எதற்காக செய்தார்கள் என்பதை சூர்யா கண்டுபிடிப்பதற்காக விசாகப்பட்டினம் வருகிறார். பிறகு போலீஸ் கமிஷனர் கொல்லப்பட்டதில் பெரிய புள்ளிகள் இருப்பது தெரியவந்தது.
மேலும் வெளிநாட்டில் இருந்து கழிவுகளை இந்தியாவிற்குள் கொண்டு வந்து ஒரு கும்பல் அதை எரிக்கிறது. இதனால் அந்த காற்று மாசுப்பாட்டினால் பல குழந்தைகள் இருக்கின்றன. மேலும் வெளிநாட்டில் காலாவதியான மருந்துகளை இந்தியாவில் கொண்டு வந்து விற்பனை செய்வதையும், இதை கண்டுபிடித்த போலீஸ் கமிஷனர் அந்த மர்ம கும்பலால் கொலை செய்யப்படுகிறார்.
இதனை கண்டுபிடித்த சூர்யா, அவர்களை எவ்வாறு தண்டிக்கிறார் என்பதும் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் ஏன் அவரை பின்தொடர்கிறார் என்பதும் படத்தில் கதையாக அமைந்திருக்கிறது.
வேலைக்காரன் 2017
நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வேலைக்காரன். குடிசைப் பகுதியில் வாழும் சிவகார்த்திகேயன் அங்குள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக எப்.எம் ரேடியோ ஒன்று தொடங்கி அதன் மூலம் தன்னுடைய கருத்தை பதிவு செய்து மக்களை நல்வழிப்படுத்த முயல்கிறார். இதைப் பிடிக்காத அந்த ஏரியாவை சேர்ந்த ரவுடியான பிரகாஷ்ராஜ் ரேடியாவை மூடச் செய்கிறார்.
இதனால் சிவகார்த்திகேயன் சேல்ஸ்மேன் வேலையில் சேர்கிறார். தற்போது அவர் சேர்ந்திருக்கும் வேளையில் மார்க்கெட்டிங் என்றால் என்ன அதன் சூட்சமங்கள் என்ன என்பதை பற்றி அவரின் உயர் அதிகாரியான பகத் பாசிலிடம் தெரிந்து கொண்டு வேலையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் களம் இறங்குகிறார்.
ஆனால் அப்பொழுது தான் அவருக்கு பல விஷயங்கள் தெரிய வருகிறது. அவர்கள் விற்கும் பொருளில் பல ரசாயன பொருட்கள் கலந்து இருப்பதும், அந்த பொருளில் மட்டுமல்லாமல் மக்கள் வாங்கும் பல பொருள்களில் பல ரசாயன பொருள்கள் கலந்திருப்பதையும் சிவகார்த்திகேயன் உணர்கிறார்.
மேலும் இந்த நிறுவனங்கள் மக்களை மூளை சலவை செய்து எவ்வாறு வாங்க வைக்கிறார்கள் என்பதையும் சிவகார்த்திகேயன் எவ்வாறு மக்களிடம் கொண்டு செல்கிறார் என்பது தான் படத்தின் கதையாக அமைகிறது.
விஐபி 1, 2
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ரகுவரன் என்ற கேரக்டரில் தனுஷ் நடித்திருப்பார். இதில் வேலையில்லாத பொறியாளராக தனுஷ் தன்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். வேலை இல்லாமல் இருக்கும் தனுஷ், தனது படிப்பிற்கு தொடர்பு இல்லாத வேலைகளை செய்ய அவருக்கு பிடிக்கவில்லை.
இதனால் ஒரு கட்டத்தில் ஒருவர் மூலம் அவருக்கு கட்டிட பொறியாளர் வேலை கிடைக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான அரசாங்க திட்டத்தில் ரகுவரன் தனது பணியை தொடங்க இருக்கிறார். ஆனால் அரசாங்கத்தின் ஒப்பந்த ஏலம் கிடைக்காத பிரபல கார்ப்பரேட் நிறுவனம் அவரின் வேலைகளை எவ்வாறு தடுக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதையாக அமைந்திருக்கிறது.
தனி ஒருவன் 2015
இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த இந்த படத்தில் சித்தார்த் அபிமன்யுவாக அரவிந்த்சாமியும், போலீஸ் அதிகாரியாக மித்ரன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியும் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் சித்தார்த் அபிமன்யு ஒரு செல்வாக்கு மிக்க ஒரு விஞ்ஞானியாகவும் அவர் பல சட்ட விரோத மருத்துவ நடைமுறைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த மருந்து மாஃபியாவின் தலைவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் மித்ரன் ஈடுபட்டு இருக்கிறார்.
இறுதியில் யார் அந்த வில்லன் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸ் அதிகாரியான மித்ரன் வெற்றி பெற்றாரா என்பதுதான் படத்தின் கதையாக அமைந்திருக்கும்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்