Connect with us

ரெண்டு பேருமே பொண்ணுங்க விஷயத்தில் ஒற்றுமையா இருக்காங்க.. நாக சைதன்யாவையும் நாகார்ஜூனாவையும் கலாய்க்கும் நெட்டிசன்கள்

nagarjuna naga chaitanya

Latest News

ரெண்டு பேருமே பொண்ணுங்க விஷயத்தில் ஒற்றுமையா இருக்காங்க.. நாக சைதன்யாவையும் நாகார்ஜூனாவையும் கலாய்க்கும் நெட்டிசன்கள்

தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஜோடி என்றால் அது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஜோடி தான். இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இது குறித்த சர்ச்சைகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் வரை இவர்களை நிச்சயதார்த்தம் குறித்த பேச்சுக்கள் எழுந்துள்ளது. நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகிய இருவரை பற்றி சர்ச்சைகள் முன்னதாகவே எழுந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.

மேலும் நாகர்ஜூனா இருவரின் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர்களின் நிச்சயதார்த்தம் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா

நடிகர் நாக சைதன்யா 8 ஆண்டுகளாக நடிகை சமந்தாவை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடனும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது அனைவரும் அவர்களின் ஜோடியை பாராட்டி, ரசித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

இந்நிலையில் விவாகரத்தின் போது நடிகை சமந்தாவிற்கு நாக சைதன்யா தரப்பில் கொடுத்த பல கோடி தொகையையும் சமந்தா வேண்டாம் என்று உதறிவிட்டு வந்துவிட்டதாகவும் அப்பொழுது தகவல் வெளியானது.

naga chaithanya

அதன் பிறகு நடிகை சமந்தாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு பல சிகிச்சைகள் எடுத்து வந்த நிலையில் தற்போது அவர் குணமடைந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நாகசைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகையான சோபிதா துலிபாலா உடன் கடந்த சில ஆண்டுகளாக டேட் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இது குறித்து இருதரப்பும் பதில் ஏதும் அளிக்கவில்லை.

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் நிச்சயதார்த்தம் செய்துள்ள புகைப்படத்தை நாக சைதன்யா- வின் அப்பா நாகார்ஜுனா இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

தந்தையின் பாணியை பின்பற்றும் நாக சைதன்யா

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போகும் நாக சைதன்யாவையும் அவரது அப்பாவை பற்றியும் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நாகர்ஜுனா இரண்டு திருமணங்கள் செய்து கொண்டு உள்ளதாகவும் அதே பாணியை தற்போதுநாக சைதன்யா பின்பற்றி வருகிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கடந்த 1984 ஆம் ஆண்டு லட்சுமி ரகுபதியை நாகார்ஜுனா திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா. இருவரும் 1990 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில் இரண்டாவதாக நடிகை அமலாவை 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

naga chaithanya

இவர்களுக்கு பிறந்த பிள்ளை தான் அகில் அக்கினேனி. திருமணத்திற்கு பிறகு நடிகை அமலாவை சினிமாவில் நடிக்க கூடாது என்ற கண்டிஷனுடன் நாகர்ஜுனா திருமணம் செய்து கொண்டார்.

தற்போது தந்தை எவ்வாறு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது வரை பிரியாமல் வாழ்ந்து வருகிறாரோ, அதுபோல நாக சைதன்யாவையும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பிரிவில்லாமல் வாழ்வார் என பலரும் பல கமெண்ட்களை செய்து வருகிறார்கள்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top