Connect with us

டாடா இயக்குனரோடு இணையும் லைக்கா! –  அடுத்த படத்திற்கு ப்ளான் தயார்!

News

டாடா இயக்குனரோடு இணையும் லைக்கா! –  அடுத்த படத்திற்கு ப்ளான் தயார்!

Social Media Bar

விஜய் டிவி மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் கவின். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து வந்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை காரணமாக தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார்.

இந்த நிலையில் சத்ரியன், இன்று நேற்று நாளை போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த கவினுக்கு 2021 ஆம் ஆண்டு லிஃப்ட் என்னும் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

லிஃப்ட் ஒரு ஹாரர் திரைப்படமாகும். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை அடுத்து கவினுக்கு ஒரு சின்ன அடையாளம் தமிழ் சினிமாவில் கிடைத்தது. இதையடுத்து தற்சமயம் அவர் வெளியான டாடா திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் கவினின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். பீஸ்ட் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த அபர்ணா தாஸ் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் வரவேற்பை கண்டு அந்த படத்தின் இயக்குனர் கணேஷ் பாபுவிற்கு லைகா நிறுவனம் வாய்ப்பளித்துள்ளது. அவரின் அடுத்த படத்தை இயக்குவதாக லைகா நிறுவனம் கூறியுள்ளது.

To Top