Bigg Boss Tamil
நம்மக்கிட்ட எல்லாம் தெளிவா பேசணும்… தர்ஷா குப்தாவுக்கு திகில் கொடுத்த விஜய் சேதுபதி.!
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் விஜய் சேதுபதி வித்தியாசமான முறைகளை கடைப்பிடிக்கிறார். கமல்ஹாசனிடம் இருந்து வித்தியாசமான நபராக இதன் மூலமாக விஜய் சேதுபதி தெரிய துவங்கியிருக்கிறார்.
பெரும்பாலும் விஜய் சேதுபதியின் அணுகுமுறை மக்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது. முதல் வாரத்திலேயே விஜய் சேதுபதி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று விட்டார். இந்த நிலையில் அடுத்து விஜய் சேதுபதி இந்த வாரமும் போட்டியாளர்களை சரியாக கையாண்டு வருகிறார்.
இந்த நிலையில் தர்ஷா குப்தா செய்த தவறு ஒன்றை நேரடியாகவே கேட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வாரம் தர்ஷா குப்தா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது ஆண் போட்டியாளர்கள் இடையே சண்டையை வர வைப்பதற்காக அர்ணவ் கூறிய ஒரு விஷயத்தை அவர்களிடம் பரப்பினார்.
விஜய் சேதுபதியின் அணுகுமுறை:
இதனால் அங்கிருந்த போட்டியாளர்கள் அர்ணவிடம் கோபப்படுத் துவங்கினர் ஒரு சண்டையும் உருவானது. இது குறித்து விஜய் சேதுபதி கேட்கும் பொழுது அருணவ் உண்மையிலேயே அப்படி கூறினாரா? என்று கேட்டார்.
ஆனால் தர்ஷா குப்தா நேரடியாக அதற்கு பதில் அளிக்காமல் அப்படி கூறினார் என்று தான் நினைக்கிறேன் என்று மாற்றி மாற்றி பதிலை கூறினார். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி உண்மையை கூறினாரா? இல்லையா என்று மட்டும் கூறுங்கள் என்று சத்தமாக கேட்டார்.
அதைக் கேட்டு பயந்து போன தர்ஷா குப்தா அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டார். இப்படி விஜய் சேதுபதியை பார்த்தாலே போட்டியாளர்கள் பயப்படும் அளவிற்கு அவருடைய அணுகுமுறை தற்சமயம் மாறி இருக்கிறது இதனால் ஒவ்வொரு சனி ஞாயிறு கிழமைகளிலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் கொஞ்சம் பயத்துடன்தான் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
