Connect with us

அந்த நிகழ்வுக்கு பிறகு நான் ரஜினியை 6 வருஷமா பார்க்க முடியல!.. வெளிப்படையாக கூறிய டெல்லி கணேஷ்!.

delhi ganesh rajinikanth

Cinema History

அந்த நிகழ்வுக்கு பிறகு நான் ரஜினியை 6 வருஷமா பார்க்க முடியல!.. வெளிப்படையாக கூறிய டெல்லி கணேஷ்!.

Social Media Bar

Rajinikanth: ரஜினிகாந்த் திரையுலகில் மிகப்பெரும் நடிகர்களில் முக்கியமானவர். தற்சமயம் தமிழில் உள்ள டாப் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். கபாலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் திரைப்பட வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழில் வரிசையாக வெற்றி படங்களாகவே கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த். தற்சமயம் அவர் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. லால் சலாம் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

ரஜினி சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் பல நடிகர்களுடன் நட்பில் இருந்தார். அப்போது அவருக்கு நடிகர் டெல்லி கணேஷுடனும் நட்பு இருந்தது. டெல்லி கணேஷ் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில்தான் அவர் முதன் முதலாக ரஜினிகாந்தை நேரில் பார்த்தார்.

ரஜினிகாந்த் அப்போது சில சில படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாக இருந்தார். அவரை அங்கு முதன் முதலாக சந்தித்த டெல்லி கணேஷ் சார் நான் உங்களின் பெரும் விசிறி என கூறியுள்ளார். சரி என அவரது நடிப்பை பாராட்டிய ரஜினி பிறகு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அதற்கு பிறகு டெல்லி கணேஷ் சினிமாவில் வாய்ப்பு தேடி படங்களில் நடிக்க துவங்கிய பிறகு கூட அவரால் ரஜினியை மட்டும் சந்திக்கவே முடியவில்லை. அதற்கு பிறகு 6 வருடம் கழித்து பொல்லாதவன் திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் டெல்லி கணேஷ். இதை அவரே தனது பேட்டியில் கூறியுள்ளார்.

To Top