News
தங்கலானை விட கம்மிதான் போல… டிமாண்டி காலணி 2 முதல் நாள் வசூல் நிலவரம்!.
தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15 வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்துடன் நேற்று டிமாண்டி காலனி திரைப்படமும் வெளியானது.
இந்நிலையில் இரண்டு திரைப்படங்களும் வெளியாகிய நிலையில் டிமாண்டி காலணி 2 படத்தின் முதல் நாள் வசூலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
டிமாண்டி காலனி 2
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட அளவு படங்கள் நடித்திருந்தாலும், அந்த படங்களில் தன்னுடைய திறமையான நடிப்புகளை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் அருள்நிதி.
இவர் குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் நடிகராவார். அந்த வகையில் இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு நடித்திருந்த டிமாண்டி காலனி திரைப்படம் அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். மேலும் இவருக்கு டிமாண்டி காலனி அறிமுக திரைப்படமாகும்.

தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அஜய் ஞானமுத்து, அவரின் இயக்கத்தில் வெளிவந்த கோப்ரா திரைப்படம் சொல்லு கொள்ளும் படியாக அமையவில்லை.
இதனால் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டிமாண்டி 2 காலனி திரைப்படம் இயக்கி இருந்தார். இந்நிலையில் தங்கலான் திரைப்படத்துடன் நேற்று வெளிவந்த டிமாண்டி காலனி 2 ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
டிமாண்டி காலனி 2ல் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். வழக்கமாக வரும் தமிழ் பேய் படங்களுக்கு மாற்றாக டிமாண்டி காலனி திரைப்படம் வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்டு வெளிவந்த திரைப்படமாகும்.
மேலும் நேற்று வெளியான டிமாண்டி காலனி 2, முதல் பாகத்தை பூர்த்தி செய்யும் அளவிற்கு வெளியாகுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
டிமாண்டி காலனி 2 வசூல்
அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், டிமாண்டி காலனி 2 திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 4 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அடுத்த 3 நாட்கள் வார இறுதி நாட்கள் வருவதால் தமிழகத்தில் மேலும் இந்த திரைப்படம் பெரிய அளவு வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரசிகர்களுக்கிடையே நல்ல கருத்துக்கள் வருவதால் இந்த திரைப்படம் வரும் நாட்களில் நல்ல வசூல் பெரும் என நம்பப்படுகிறது.
