Latest News
டிமாண்டி காலணி 2 எப்படி இருக்கு… முதல் பாகம் அளவுக்கு இருக்கா?.. பட விமர்சனம்!..
தமிழ் சினிமாவில் தற்போது பல வித்தியாசமான கதை அம்சம் கொண்ட பல படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் மக்களுக்கு ஹாரர் படத்தின் மீது அதிக அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.
தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பேய் படங்களை விரும்பி பார்த்து வருகிறார்கள். அவ்வாறு எடுக்கும் படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதில் பாகம் ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாக எடுத்துக் கொண்டு செல்வார்கள்.
அந்த வகையில் தமிழ் பேய் படங்களில் பல பாகங்கள் வந்த போதும் அனைவருக்கும் மிகப் பிடித்த படமாக இருந்தது டிமான்டி காலனி. டிமான்டி காலனி முதல் பாகம் அனைவருக்கும் பிடித்திருந்த நிலையில், தற்போதுடிமான்டி காலனி பாகம் 2 வெளிவந்து தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
டிமான்டி காலனி 2
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவரின் வித்தியாசமான இயக்கத்தின் மூலம் படங்களை கொடுத்தவர். இந்நிலையில் இவர் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் டிமான்டி காலனி. இயக்குனர் அஜய் ஞானமுத்துக்கு அறிமுக திரைப்படமாக அமைந்தது.
தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு டிமான்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலக அளவில் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி தயாரித்துள்ளார்.
படம் எப்படி இருக்கிறது?
தற்போது தமிழ் சினிமாவில் பாகம் இரண்டு எடுக்கும் அனைத்து படங்களும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் டிமான்டி காலனி 2 தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக உள்ளது.
மேலும் டிமான்டி காலனி பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டிற்கும் உள்ள தொடர்பை இயக்குனர் அழகாக கொடுத்திருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் முதல் பாகத்தில் செயின் வைத்து நகர்ந்த கதைக்களம் போலவே இந்த படத்திலும் அமைந்திருந்தாலும் அதில் சில ட்விஸ்டுகள் வைத்து இயக்குனர் அழகாக இயக்கியிருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் அருள் நிதியின் நடிப்பு வெகுவாக அனைவராலும் பாராட்டு பெற்று இருக்கிறது. மேலும் அவரை பேய் பிடித்த பிறகு அவரின் நடிப்பு சிறப்பாக உள்ளது.
டிமான்டி காலனி பாகம் ஒன்று போலவே விறுவிறுப்பான கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ட்விஸ்டுகளை அடுக்கி காட்சிகள் நகர்வதால் பயப்படும் அளவிற்கு எந்த இடத்திலும் காட்சிகள் அமையவில்லை. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மட்டுமே படமாக இருக்கிறது.
டிமான்டி காலனி ஒன்றில் டிமாண்டி வரும் போது எவ்வாறு ஒரு பயம் ஏற்பட்டதோ அதேபோன்ற உணர்வு டிமாண்டி இரண்டிலும் ஏற்படும். மேலும் படத்திற்கு இசை பக்க பலமாக அமைந்திருக்கிறது. அருள்நிதிக்கு இந்த படம் கம்பேக்காக அமையும் என்றும் கூறப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்