Connect with us

சிவகார்த்திகேயன் என்னை மறந்துருப்பாருன்னு நெனைச்சேன்… மனம் நெகிழ்ந்த சின்ன திரை பிரபலம்!..

sivakarthikeyan dev anand

News

சிவகார்த்திகேயன் என்னை மறந்துருப்பாருன்னு நெனைச்சேன்… மனம் நெகிழ்ந்த சின்ன திரை பிரபலம்!..

Social Media Bar

Sivakarthikeyan சின்னத்திரையில் சாதாரண தொகுப்பாளராக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் தனது காலை பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல் போன்ற சின்ன சின்ன கதைகளத்தை கொண்ட படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் கொஞ்சம் கொஞ்சமாக கமர்சியல் ஹீரோவாக உருவெடுக்க துவங்கினார்.

ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்கள் சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்களாகும். அதற்குப் பிறகு ஒரு ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கினார் சிவகார்த்திகேயன்.

தற்சமயம் தமிழில் உள்ள முக்கியமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். இந்த நிலையில் தொலைக்காட்சிகளில் வேலை பார்த்த பொழுது தொலைக்காட்சி தொடர்பாக பல நபர்களிடம் பழக்கத்தில் இருந்தார் சிவகார்த்திகேயன்.

அவர்கள் அனைவரிடமும் எப்போதும் மறக்காமல் பேசியும் பழகியும் வருகிறார். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் சிவகார்த்திகேயன் செய்து வருகிறார் என்று சிலர் தங்களது பேட்டிகளில் கூறியுள்ளனர். இப்படியாக தமிழ் நாடகங்களில் பல காலங்களாக நடித்து வரும் நடிகர் தேவ் ஆனந்த் தனது பேட்டியில் சிவகார்த்திகேயன் பற்றி கூறும் பொழுது ஒருமுறை சின்ன திரை நட்சத்திரங்களுக்கான கூட்டம் ஒன்று நடந்தது.

அந்த கூட்டத்திற்கு சிவகார்த்திகேயனும் வந்திருந்தார் அப்பொழுது சிவகார்த்திகேயன் வளர்ந்த ஒரு நடிகராக இருந்தார். அவர் என்னை கண்டிப்பாக கண்டு கொள்ள மாட்டார் என்று நினைத்தேன். இருந்தாலும் என்னை பார்த்தவுடன் அண்ணன் நல்லா இருக்கீங்களா அண்ணே, உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு என்று மிக சாதாரணமாக பேசினார். மட்டுமின்றி அரை மணி நேரம் என்னுடன் பேசிவிட்டுதான் சென்றார் என்று தனது பேட்டியில் மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார் நடிகர் தேவ் ஆனந்த்,

To Top