எங்க கோத்து விட்டுருக்க பாரு.. தேவாவுக்கு எஸ்.ஜே சூர்யா செய்த சம்பவம்!..
தேனிசை தென்றல் என தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. முதன் முதலாக நாட்டுப்புற இசையை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி அதற்கு ஒரு அங்கீகாரத்தையும் பெற்று தந்தவர் தேவா.
இசையமைப்பாளர் என்பதை தாண்டி பாடகராகவும் இவர் மிக பிரபலமானவர். இவர் இசையமைத்த பல பாடல்களை இவரே பாடியுள்ளார். எஸ்.ஜே சூர்யா முதன் முதலாக இயக்கிய வாலி திரைப்படத்திற்கும் சரி அதற்கு பிறகு வந்த குஷி திரைப்படத்திற்கும் சரி தேவாதான் இசையமைத்தார்.
இரண்டு படங்களிளுமே பாடல்கள் பெரும் வெற்றி கண்டது தேவாவால்தான். தேவா ஒரு பேட்டியில் பேசும்போது எஸ்.ஜே சூர்யா எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர் என தேவா குறித்து பேசியிருந்தார். எந்த அளவிற்கு வெளிப்படை என்றால் ஒருமுறை தேவாவிற்கே பயம் காட்டி உள்ளார்.
ஏ சோனா என்கிற பாடலுக்கான இசையை அமைக்கும்போது எதார்த்தமாக அதை பாடிக்கொண்டே இசையமைத்துள்ளார் தேவா. அதற்கு பிறகு அந்த பாடலை பாடுவதற்காக பாடகர் ஹரிஹரன் வந்தார். அப்போது எஸ்.ஜே சூர்யா தேவாவை பாட சொல்லிவிட்டு அதே போல பாடுங்கள் சார் என ஹரிஹரனிடம் கூறியுள்ளார்.
இதை கேட்டு தேவா அதிர்ச்சியாகிவிட்டார். ஹரிஹரன் எவ்வளவு பெரிய பாடகர் அவரை போய் என்னை பார்த்து பாட சொல்றீங்களே என பதறிவிட்டார். இதை அந்த பேட்டியில் தேவா பகிர்ந்திருந்தார்.