அஜித் பட இயக்குனோரோடு இணையும் தனுஷ் ! – வெறித்தனமான காம்போ!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். தமிழில் முக்கியமான சில இயக்குனர்களோடு மட்டுமே இவர் படம் நடித்து வருகிறார்.

தற்சமயம் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சில இடையில் வெளியாகின.

இந்த படத்திற்கு பிறகு தனுஷ் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித்தை வைத்து நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களை கொடுத்தவர் ஹெச். வினோத்.

தற்சமயம் அஜித் நடிக்கும் துணிவு படத்தையும் கூட இயக்கி வருகிறார். துணிவுக்கு பிறகு விஜய் சேதுபதியுடன் ஒரு படம் செய்யலாம் என இருந்தார் ஹெச். வினோத். ஆனால் துணிவு படப்பிடிப்பு முடிய அதிக நாட்கள் பிடிக்கவே வேறு படத்தில் கமிட் ஆனார் விஜய் சேதுபதி.

எனவே துணிவு படத்திற்கு பிறகு தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார் ஹெச்.வினோத். இந்த படத்தை 777 ஸ்டுடியோ தயாரிக்க உள்ளது.

Refresh