Connect with us

நீலாம்பரியாக மாறிய நயன்தாரா… தனுஷிற்கு எதிராக போட்ட மாஸ்டர் ப்ளான்..!

Tamil Cinema News

நீலாம்பரியாக மாறிய நயன்தாரா… தனுஷிற்கு எதிராக போட்ட மாஸ்டர் ப்ளான்..!

Social Media Bar

சமீபத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்த திருமணம் குறித்த விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.

அப்படி வருகை தந்த பிரபலங்கள் குறித்துதான் தற்சமயம் நிறைய சர்ச்சைகள் சென்று கொண்டிருக்கின்றன. முக்கியமாக நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருமே அந்த திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர்.

சமீபத்தில்தான் நடிகர் தனுஷ்க்கும் நயன்தாராவிற்கும் இடையே பெரிய பிரச்சனை சென்று கொண்டிருந்தது. நடிகர் தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் உள்ள காட்சிகளை நயன்தாரா தனது ஆவண திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்தார்.

தனுஷ் நயன் பிரச்சனை:

இதனை தொடர்ந்து தனுஷ் இதற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். மேலும் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இருந்தார். இந்த நிலையில் தனுஷை கடுமையாக விமர்சித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார் இப்படியாக பிரச்சனை சென்று கொண்டிருக்க ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்திற்கு இவர்கள் இருவருமே சென்று இருந்தனர்.

ஏனெனில் ஆகாஷ் பாஸ்கரன் தனுஷ் நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தை தயாரித்து வருகிறார். அதே சமயம் இவர் விக்னேஷ் சிவனுக்கு நண்பராக இருந்திருக்கிறார். இந்த நிலையில் இந்த திருமணத்தில் தனுஷிற்கு பக்கத்திலேயே நயன்தாரா அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று அதிக வைரலாக துவங்கியிருக்கிறது.

இது குறித்து சினிமா விமர்சகர்கள் கூறும் பொழுது நயன்தாராவிற்கு தனியாகதான் இருக்கை போடப்பட்டிருந்தது ஆனால் அவர் தனுஷை பலி வாங்க வேண்டும் என்று தனுசுக்கு அருகில் இருக்கை போட சொல்லிவிட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்கிறார்.

அதை வேண்டும் என்றே தன்னுடைய ஆட்கள் மூலமாகவே புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார் என்று கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

To Top