Connect with us

தனுஷ் காசில் மஞ்ச குளிச்ச காதல் ஜோடிகள்.. நயன்தாரா விக்னேஷ் சிவன் செய்த காரியம்..!

Tamil Cinema News

தனுஷ் காசில் மஞ்ச குளிச்ச காதல் ஜோடிகள்.. நயன்தாரா விக்னேஷ் சிவன் செய்த காரியம்..!

Social Media Bar

Talks about Dhanush Nayanthara’s problem are currently being talked about on social media. A group of people are speaking in support of Nayan and a group in support of Dhanush.

தனுஷ் நயன்தாரா பிரச்சனை குறித்த பேச்சுக்கள் அதிகமாக தற்சமயம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. நயனுக்கு ஆதரவாக ஒரு குழுவினரும் தனுஷிற்கு ஆதரவாக ஒரு குழுவினரும் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் தனுஷ் தொடர்ந்து அவர் தயாரித்த நானும் ரவுடிதான் பட காட்சிகளை நயன்தாராவிற்கு கொடுக்க மறுப்பதற்கு காரணம் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது நடந்த நிகழ்வுகள் தான் என்று ரசிகர்கள் பக்கத்தில் இருந்து ஒரு பேச்சு இருக்கிறது.

nayanthara dhanush

nayanthara dhanush

நானும் ரவுடிதான் படத்தில் நடந்த சம்பவம்:

அதாவது விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுதுதான் நயன்தாராவை காதலிக்க துவங்கினார். அந்த சமயத்தில் ஒழுங்காக படப்பிடிப்புகளை நிகழ்த்தாமல் தொடர்ந்து இருவரும் காதலில் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து படப்பிடிப்புக்கு தனுஷ் செலவழித்த காசில் பாதியை இவர்கள் காதலிப்பதற்கு செலவழித்து இருக்கின்றனர். இதனால் கோபம் அடைந்த தனுஷ் அப்பொழுதே இதை பெரிய பிரச்சனையாக மாற்றி இருக்கிறார். இருந்தாலும் நயன்தாரா பேசி அப்பொழுது சமாதானப்படுத்தி இருக்கிறார்.

படம் வெளியான பிறகும் கூட இந்த அதிருப்தியில் இருந்து மீளாமல் தான் இருந்திருக்கிறார் தனுஷ். அதனால் தான் இப்பொழுதும் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை இவர்களுக்கு கொடுப்பதற்கு அவர் மறுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

To Top