Tamil Cinema News
படுக்கையில் தனுஷுடன் நெருக்கம்.. இப்ப மட்டும் எதிரியா தெரியுறாரா?.. வைரல் ஆகும் வீடியோ.!
தற்சமயம் நயன்தாரா வெளியிட்டிருக்கும் அறிக்கை என்பது தமிழ் சினிமாவிலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பெரும்பாலும் எந்த நடிகைகளும் பெரிய நடிகர்களை விமர்சித்து ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு தயாராக இருக்க மாட்டார்கள்.
ஏனெனில் அது அவர்களது சினிமா வாழ்க்கையையே பாதிக்கும். ஆனாலும் அரசியல் பின்பலம் இருக்கிற காரணத்தினால் நயன்தாரா தொடர்ந்து தற்சமயம் தனுஷ் குறித்து மோசமான அறிக்கை ஒன்றை தயார் செய்து வெளியிட்டு இருக்கிறார்.
தனுஷ் பக்கம் நியாயம்:
இதில் தனுஷின் பக்கமே நியாயம் இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இன்னொரு பக்கம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போதுதான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
அப்படி இருக்கும் பொழுது தனுஷ் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போகலாம் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் இந்த நயன்தாராவின் அறிக்கைக்கு பிறகு தனுஷ் விட்டுக்கொடுத்து போக இனிமேல் வாய்ப்பு கிடையாது என்றும் தெரிகிறது.
நயன்தாராவின் மாற்றம்:
இப்பொழுது நயன்தாரா தனுஷ்க்கு எதிராக இருந்தாலும் கூட சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்காக எல்லா பிரபலங்களுடனும் அவர் நட்பாக தான் இருந்து வந்தார். அப்பொழுது தனுஷ் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார்.
தனுஷுடன் சேர்ந்து நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி திரைப்படம் அப்பொழுது பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும் அவர் ரஜினியின் மருமகனாகவும் இருந்தார் என்பதால் தொடர்ந்து அவருடன் நட்புடன் இருந்திருக்கிறார் நயன்தாரா.
தற்சமயம் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வெளியிட்டு வரும் ரசிகர்கள் அப்பொழுது மட்டும் தனுஷ் எதிரியாக தெரியவில்லை இப்பொழுது திருமணமாகி தனுஷ்க்கு சமமான ஒரு இடத்தை பிடித்த பிறகு அவர் உங்களுக்கு எதிரியாக தெரிகிறாரா என்று கூறி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
