தனுஷை வயிறெரிய வைத்த 26 வயது நடிகை.. அந்த விஷயம் எனக்கே சினிமாவில் கிடைக்கலை.. வருத்தப்படும் தனுஷ்..!
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களின் மிக முக்கியமானவராக இருந்து வருகிறார். பெரும்பாலும் தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்து வருகின்றன.
அதனால் தொடர்ந்து அதற்கான மார்க்கெட் என்பதும் அதிகரித்து வருகிறது அதேபோல தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவராக தனுஷ் இருந்து வருகிறார்.
தற்சமயம் தனுஷ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி திரைப்படங்களை இயக்கவும் தொடங்கி இருக்கிறார். அப்படியாக சமீபத்தில் அவர் இயக்கி வெளியான ராயன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
நடிகை மீது பொறாமை:
ராயன் திரைப்படத்தில் தனுஷிற்கு பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரமாக அதில் நடித்திருந்தவர் நடிகை துஷாரா விஜயன். நடிகை துஷாரா விஜயனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.

சரண்யா என்கிற அந்த கதாபாத்திரம்தான் படத்தை கொண்டு செல்லும் கதாபாத்திரமாக இருந்தது. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுதுதான் ராயன் திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது.
அப்பொழுது வேட்டையனில் நடித்துவிட்டு வரும் துஷாரா விஜயனிடம் தனுஷ் பேசும்பொழுது தமிழ் சினிமாவிலேயே நான் ஒரு நடிகையை பார்த்து பொறாமைப்படுகிறேன் என்றால் அது நீதான் என்று கூறியிருக்கிறார். ஏனெனில் சினிமாவிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் கூட தனுஷிற்கு ரஜினியுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.