Tamil Cinema News
எஸ்.கேவின் இந்த நிலைக்கு காரணமே தனுஷ்தான்.. அதை அவர் புரிஞ்சிக்கல.. பிரபலம் காட்டம்
தமிழில் உள்ள டாப் நடிகர்களில் ஒருவராக தற்சமயம் சிவகார்த்திகேயன் மாறி இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த டான் அமரன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே அதிக வசூலை பெற்று கொடுத்தன.
அந்த வகையில் இப்பொழுது வசூல் வேட்டை கொடுக்கும் ஒரு நடிகராக மாறி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து பத்திரிகையாளர் கூறும் பொழுது சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் தான்.
ஏனெனில் சிவகார்த்திகேயனை பொருத்தவரை விமல் மாதிரி ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான் அவரது அதிகபட்ச ஆசையாகவே இருந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் சிவகார்த்திகேயனை விட விமல் பிரபலமான நடிகராக இருந்தார்.
ஆனால் அதை எல்லாம் தாண்டி சிவகார்த்திகேயனை இன்னும் அதிக உயரத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியவர் தனுஷ் அதற்கான பிரதிபலனை தனுஷ் எதிர்பார்க்க தான் செய்வார்.
ஆனால் சிவகார்த்திகேயன் அதை செய்யவில்லை என்று தான் கூற வேண்டும் என்று விளக்கி இருக்கிறார் பத்திரிக்கையாளர் பிஸ்மி.
