Connect with us

தனுஷிற்கு செஞ்சதுக்கு பதிலடிதான் இது எல்லாம்.. நயன்தாராவை தனுஷ் பழிவாங்க இதுதான் காரணம்.!

dhanush nayanthara

Tamil Cinema News

தனுஷிற்கு செஞ்சதுக்கு பதிலடிதான் இது எல்லாம்.. நயன்தாராவை தனுஷ் பழிவாங்க இதுதான் காரணம்.!

Social Media Bar

Actor Dhanush is an actor who is constantly getting opportunities in Tamil cinema. Dhanush continues to get opportunities in cinema. However, a problem has arisen between Dhanush and Nayanthara

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் இப்பொழுது தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது.

அதனால் அதற்கான மார்க்கெட்டும் பெரிதாக இருந்து வருகிறது அதே சமயம் ஒரு சில திரைப்படங்களை தனுஷ் தயாரித்தும் இருக்கிறார் அப்படியாக தனுஷ் தயாரித்த திரைப்படங்களில் நானும் ரவுடிதான் திரைப்படமும் ஒன்று.

இந்த திரைப்படத்தை தயாரித்த பொழுது ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகதான் இப்பொழுது அது பூதாகரமாக வெடித்திருக்கிறது என்று கூறப்படுகிறது. தன்னுடைய திருமண ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளி ஆவதில்  தலையிட்டு தொல்லை கொடுத்து வருகிறார் என்று கூறியிருந்தார் நயன்தாரா.

dhanush

dhanush

தனுஷிற்கு ஏற்பட்ட நஷ்டம்:

இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்று பார்க்கும் பொழுது சினிமா துறையினரால் இதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கும் பொழுது விக்னேஷ் சிவன் ஏகப்பட்ட நஷ்டத்தை படத்தில் ஏற்படுத்தியிருந்தார்.

இதனால் நானும் ரவுடிதான் திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் கொடுத்தபோதும் கூட அது விக்னேஷ் சிவன் செய்த நஷ்டத்தை ஈடு செய்யவில்லை. இதனால் கோபமடைந்த தனுஷ் அப்பொழுதிலிருந்தே நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகளின் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்பொழுது தனுஷின் அனுமதியில்லாமல் நானும் ரவுடிதான் படத்தில் உள்ள காட்சிகளை நயன்தாரா அந்த ஆவண படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். இதனால் அந்த ஆவணப்படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் தனுஷ்.

To Top