Tamil Cinema News
தனுஷ்க்கு எதிராக நயன்தாரா சட்ட ரீதியாக என்ன செய்ய முடியும்.. ஒரு அலசல்.!
நயன்தாரா மற்றும் தனுஷ் இருவருக்கும் இடையேயான பிரச்சனை என்பது இப்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நயன்தாரா தனுஷின் ஒப்புதல் இல்லாமலேயே நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வரும் காட்சிகளை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார்.
எனவே அந்த காட்சிகளை வைப்பதற்கு நயன் தனுஷ் பக்கத்திலிருந்து இரண்டு வருடமாக போராடியும் அனுமதி வழங்கவில்லை. அனுமதி வழங்காத காரணத்தினால் நயன்தாராவே அந்த காட்சிகளை வைத்திருக்கிறார். இதனை அடுத்து தனுஷ் இது குறித்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்.
ஏனெனில் தனுஷின் தயாரிப்பில்தான் நானும் ரவுடிதான் திரைப்படம் உருவானது. எனவே தனுஷின் அனுமதியில்லாமல் அந்த படம் குறித்த எந்த ஒரு விஷயத்தையும் பயன்படுத்துவதற்கு நயன்தாராவிற்கு அனுமதி கிடையாது.
நயன்தாராவின் வாதம்:
ஆனால் அந்த படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலின் வரிகளை விக்னேஷ் சிவன் தான் எழுதினார் என்பதால் அந்த வரிகளை நான் பயன்படுத்திக் கொள்வேன் என்று நயன்தாரா கூறுகிறார். ஆனால் சட்டப்படி பார்க்கும் பொழுது அதற்கும் விக்னேஷ் சிவன் சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பதால் அதையுமே அவர் பயன்படுத்த முடியாது படத்தின் அனைத்து தனுஷிற்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கிறது.
ஆனாலும் நயன்தாரா இதுகுறித்து அறிக்கை வெளியிடும் பொழுது சட்ட ரீதியாக தனுஷை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஏனெனில் படத்தில் இடம்பெறாத காட்சிகளைதான் netflix-க்கு நயன்தாரா கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் பக்கம் இருக்கும் நியாயம்:
சட்ட ரீதியாக பார்க்கும் பொழுது அதற்கு தனுஷ் எந்த ஒரு உரிமையும் கோர முடியாது என்று ரசிகர்கள் பக்கத்தில் இருந்து பேச்சுக்கள் இருக்கின்றன ஆனால் உண்மையில் பார்க்கும் பொழுது படப்பிடிப்பு சம்பந்தமான அனைத்துமே தயாரிப்பாளருக்குதான் சொந்தமானது.
ஏனெனில் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு நடப்பதற்கு லட்சங்களில் செலவு செய்பவர்கள் தயாரிப்பாளர்கள் தான் அப்படி இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட காட்சி படத்தில் வைக்கப்படவில்லை என்றாலும் கூட அது தயாரிப்பாளருக்கு சொந்தமானதுதான்.
எனவே அதை பயன்படுத்த வேண்டும் என்றால் தயாரிப்பாளரின் அனுமதி வேண்டும் என்று இன்னொரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன எப்படி பார்த்தாலும் சட்டரீதியாக போனால் தனுஷ் பக்கம்தான் ஆதரவாக அது முடியும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.